கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மருந்து விசறல்…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை(15) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட கல்முனை சுமத்ராராம விகாரை சூழல் பெரிய சந்தைத் தொகுதி பேருந்து நிலையம் வீட்டுத்திட்டங்களுக்கு சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் கிருமிநாசினி விசிறி தொற்று நீக்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ரஸாக் (ஜவாத்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப், உட்பட பொலிஸார் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த செயற்பாட்டிற்கு கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன நன்றிகளை தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை