யாழில் 4 ஆரம்ப பாடசாலைகளில் கொள்ளைச் சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருட்களும் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதிதியில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டு.கார்த்திகேசு வித்தியாலயம், தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாசாலை, பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தியாலயம் மற்றும் சுப்ரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

4 பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து மடிகணினி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேரைக் கைது செய்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.