கந்தளாயில் இறந்த மிருகங்கள் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் உப்பாறு பாலத்தில் கீழ் இனந்தெரியாதோரால் இறந்த மிருகங்கள்,குப்பை கூழங்களை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் முறையிடுகின்றார்கள்.
முடிவெட்டிய கழிவுகள்,மற்றும் கோழி,மாடுகளின் கழிவுகளையும் கொட்டுவதால் பாரிய நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உப்பாறு பாலமானது கந்தளாய் பேராறு பிரதேசத்தில் முதலாம் குலனியையும்,இரண்டாம் குலணியையும் பிரிக்கும் பாலமாகும் அப்பகுதியில் தமிழ், சிங்கள,மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இனந்தெரியாதோரால் இவ்வாறு கழிவுகளை கொட்டுவதால் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், அவ்வீதியால் பிரயாணம் மேற்கொள்கின்ற போது பல்வேறு வகையான துர் நாற்றங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை