ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் மண்சரிவு , போக்குவரத்து பாதிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக ஒருவழிப்போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே அட்டன் கொழும்பு ,அட்டன் கண்டி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை அட்டன் கொழும்பு , அட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் இவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.