தேர்தல் சட்டத்தின் பிரகாரமே இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க அனுமதி: வன்னி தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சமன் பந்துலசேன…

தேர்தல் சட்டத்தின் பிரகாரமே இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா மாவட்ட அதச அதிபருமான சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் சட்டத்தின் 125 (அ) உறுப்புரைக்கு அமைவாக இடம்பெயர்ந்த வாக்காளர் ஒருவர் தான் வாழும் பிரதேசத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை முறைப்படி கோரும் இடத்து தேர்தல் ஆணைக்கழு அதனை ஏற்றுக் கொள்ளும். குறிப்பாக மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளத்தில் குடியிருக்கும் வாக்காளர்கள் தமக்கு பாதுகாப்பு அடிப்படையின் கீழ் அவருக்கு அங்கு வாக்களிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கும். அந்த அடிப்படையின் கீழ் தான் புத்தளத்தில் உள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பயங்களை அனுப்பியுள்ளனர். அதனை தேர்தல் ஆணைக்குழு உரிய முறைப்படி ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இம்முறை வழங்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் என்ற வகையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களில் எந்தவித தங்கு தடையுமின்றி வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கொவிட் – 19 இன் தாக்கத்திற்கு அமைவாக சுகாதார நடைமுறைகளும் உன்னிப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் வீட்டை விட சுகாதார நடைமுறைகள் பேணப்பட்டு தூய்மையானதாக வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அதனால் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.

ஆனால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள  வாக்களார்கள் மன்னார் பிரதேசத்திற்கோ அல்லது தங்களது நிரந்தர பிரதேசத்திற்கோ சென்று வாக்களிக்கும் போது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக தான் அவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இடம்பெயர்ந்து இருக்கும் தற்போதைய இடத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி அந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்தும் அதிகாரியே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி. எனவே எந்தவித மோசடிகளும், முறைஆகுடுகளும் இன்றி வாக்களிப்பு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.