தோல்வி கண்ட ‘பட்ஜட்-ஹர்ஷ டி சில்வா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு – செலவுத் திட்டமாகவே நாம் கருதுகின்றோம். தோல்வி கண்டுள்ள வரவு – செலவு திட்டத்தையே அரசு முன்வைத்துள்ளது.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் புதுமையான, புதிய சிந்தனைகளைக் கொண்ட வரவு – செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறான எந்தவொரு அவசியமான காரணிகளும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான மோசமானதொரு வரவு – செலவு திட்டத்தை அரசு முன்வைத்ததை எண்ணி நாம் கவலைப்படுகின்றோம்.

நாட்டின் நம்பிக்கை இதன் மூலமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்றே கூறியாக வேண்டும், எனவே, இந்த வரவு – செலவுத் திட்டம் தோல்வி கண்டுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.