சிப்தொர உதவிக்கான மாணவர் நேர்முகத் தேர்வு

நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய சமுர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பிரிசில் திட்டத்தில் மாணவர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிப்தொர உதவி வழங்கும் வகையில் பிரதேச செயலாளர் வழிகாட்டலில் நேர்முகத் தேர்வு செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எட்டு கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி பெறும் உயர்தர கல்வி பயிலும் மாணவர்களில் 121 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு வருடத்திற்கான நிதி உதவியாக மாதாந்தம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வீதம் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

குறித்த நேர்முகத் தேர்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

(ந.குகதர்சன் )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.