பளை வைத்தியசாலை செயற்பாடுகள் முடக்கப்படுமா…

பளை வைத்தியசாலை செயற்பாடுகள் முடக்கப்படுமா  என பிரதேச வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்
நேற்றைய தினம்   யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கியது  இதில் காயமடைந்த 14 பேர்   பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது
அண்மையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கொரோணா நோயாளி ஒருவர் இனம்காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு அங்கிகளுடன்  நோயாளியைக் கையாண்ட வைத்தியர் , தாதியர், உட்ப்பட சில உத்தியோகத்தர்களை வைத்தியசாலை நிர்வாகத்தினரின் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் தனிமைப்படுத்திய  கிளிநொச்சி பிராந்திய  சுகாதார பணிப்பாளர் பளை வைத்தியசாலை விடயத்தில் அமைதிகாப்பது ஏன் என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
பளை வைத்தியசாலையை பொறுத்தவரை எவ்வித பாதுகாப்பு அங்கிகளும் இல்லாமலே விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அதனை விட பளை வைத்தியசாலை  கிளிநொச்சி பிராந்திய  சுகாதார பணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவதால் உடனடியாக அவர் தலையிட்டு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பளை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுமட்டுமல்லாது விப்த்து நடைபெற்ற சம்பவ இடத்திலிருந்த படையினர் உத்தியோகத்தர்கள் பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பிரதேச வாசிகள் கேட்டு நிற்கின்ரனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.