P.C.R பரிசோதனைக்காக சமூகமளிக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புறக்கோட்டை பொலிஸ் வலயப்பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து இன்று அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டது.

இருப்பினும், புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மற்றும் 4ஆம், 5ஆம் குறுக்குத்தெரு பகுதிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இது தொடர்பில் தெரிவிக்கையில், மெனிங் சந்தையில் மொத்த வர்த்தகம் மரக்கறி, பழ வகைகளை விநியோகிப்பதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை P.C.R பரிசோதனைக்காக சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவித்திருந்த போதிலும் இதற்காக சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.