கவனயீர்ப்பில் ஈடுப்பட்டுள்ள முல்லை மீனவர்களைச் சந்தித்த அரசியல் பிரதிநிதிகள் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்களின் கவனயீர்ப்பு நடவடிக்கை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து இம்பெற்று வருகின்றது.

இந்திலையில் இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை, அரசியல் பிரதிநிதிகள் பலரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டி ஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோர் இவ்வாறு மீனவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந் திலையில் மீனவர்களுடன் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுப்பதற்கு பிரதமர், ஜனாதிபதியுடன் பேசுமாறு காதர் மஸ்தானிடம் வலியுறுத்தயிருந்தார்.

இப் பிரச்சினை வடபகுதியில் அதிகரித்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், எதிர்வரும் 25ஆம் திகதி பிரதமர், ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள இது தொடர்பிலான கலந்துரையாடலில் தாம் இது தொடர்பில்நிச்சயமாகப் பேசவுள்ளதாக காதர் மஸ்தான் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.