(வீடியோ ) சாத்வீக போராட்டத்திற்க்கு தமிழ் பேசும் சமூகங்களின் ஆதரவினை வேண்டுகிறரர்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் !
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நாளை சிவில் சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் சாத்வீக போராட்டத்திற்க்கு அனைத்து தமிழ் பேசும் சமூகங்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென கரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி .ஜெயசிறில் வேண்டுகொள் விடுத்துள்ளார் இன்று(02) பிற்பகல் கரைதீவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே இந்த வேண்டுகோளை முன்வைத்தார் .
ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
கொரோனா காரணமாக இவ் போராட்டத்திற்க்கு நான் உள்ளிட்ட 33 பேருக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு உள்ள நிலையில் ,குறிப்பாக நாட்டில் பல நிகழ்வுகள் இடம் பெறும் நிலையில் அல்லது அரிசியல் கூட்டம் இடம்பெறும் போது மட்டும் இந்த கொரோனா துங்குகிறதா ? தமிழர்களின் நீதி கேட்டுகும் போது மாத்திரம் இந்த கொரோனா தொற்றுகிறதா ? என கேள்வியெழுப்பினார் .
மேலும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நீதி கிடைக்கப் பெற வேண்டும் மேலும் எமது தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சார விடயங்கள் பல்வேறு பெளத்த மயமாக்களை அரசு நிறுத்த வேண்டும். மேலும் இது எமது உண்மையான நியாமான போராட்டமாகும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை