கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் கன்னியானாள் : றிசாத் எம்.பி மீதான மர்ம முடிச்சுக்கள் அவிழ தொடங்கியுள்ளது – பீ .எம். ஷிபான்.

றிசாட் பதியுதீன் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் அவசரமாக போலியாக புனைந்து கட்டிய முடிச்சுக்கள் அவிழத்தொடங்கும் காலம் கனிந்துவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மைத்துணர் கற்பழித்ததாக கூறப்பட்டபெண் இன்னும் கன்னித்தன்மையோடு உள்ளதாக நீதிமன்றில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட அறிக்கைகள் வெளிவந்ததன் பிரகாரம் அது றிசாட் பதியுதீன் மீது புனைந்த போலிக் களங்கத்தினை போக்கி அவரினதும் குடும்பத்தினதும் நன்மதிப்பை இன்னொருபடி மேலே உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மனோ கணேசன், திகாம்பரத்தின் இழிசெயல் அரசியலுக்கும் கேள்விகளுக்கும் விடையாகவே இதனை நோக்கலாம். மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்தை வைத்து அரசியல் நாடகம் நடாத்தி வரும் இவ்விருவரும் தொடர்ச்சியாக ஹட்டன், நுவரெலியா பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்ததும் மலையக சிறுமிகளுக்கு றிசாட் பதியூதீன் குடும்பத்தாரிடம் பாதுகாப்பில்லை என நீலிக்கண்ணீர் வடித்ததும் இன்று புஷ்வாணமாய் போயுள்ளது.

மொட்டின் ஊடக வலிமையால் 11 சிறுமிகள் கற்பழிப்பு எனப் பொட்டெழுத்தில் செய்திகளை பரப்பியதெல்லாம் வெறும் பொய்யும் போலியுமே தவிர வேறொன்றும் இல்லை என இப்பெண் ஒருத்தியின் கன்னித்தன்மையே பறைசாற்றுகின்றது. உதய கம்பன்பில சிறுமிகளுக்கு நீதி வேண்டி தெய்வாதாரனை செய்ய வெளிக்கிட்டுருந்தமை ரிசாட் பதியுதீனை அவமதிப்பதற்காகவன்றி வேறொன்றுக்காகவல்ல. ஆனால் அவரின் கட்சியில் உள்ள அக்குறஸ்ஸ பிரதேச சபை தலைவர் கற்பழித்து கொண்டாடிய முன்னூறு பெண்களுக்குமாக முன்னூறுமுறை தெய்வாராதனை செய்யாமல், கற்பழிக்கப்படாமலேயே இருந்த கன்னிகளுக்காக அவர் தெய்வாராதனை செய்வதில் பிரயோசனமிருக்காது.

ஏழைத் பெண்களை மூலதனமாக்கி றிசாட் பதியுதீனின் நன்மதிப்புக்கு கேடுவிளைவித்துக்கொண்டிருக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கு, இந்த நாட்டின் இறுதி நம்பிக்கையாக உள்ள நியாய சபைகள் நீதியை மாத்திரம் பரிசளிப்பது கண்டு ஆனந்தமடைவதோடு தலைவரும் தாரமுமம் குடும்ப உறுப்பினரும் நீதியைப்பெற்று விரைவில் சிறைமீள்வார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.