கல்முனை நல்லிணக்க மன்றத்தின்

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)

சமாதானமும் சமூகப்பணி அமைப்பின்
அனுசரணையுடன் இயங்கும் கல்முனைப் பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட ஒன்றுகூடல்
நிகழ்வு இன்று (15) கல்முனை ஹிமாயா வீச் ஹோட்டலில் அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனைபிரதேச நல்லிணக்க மன்றத்தின் பிரதேச இனைப்பாளர்  எஸ்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச நல்லிணக்க மன்ற கடந்த கால மற்றும் எதிர்கால நடவடிக்கை
தொடர்பிலும் இளைஞர்கள் மத்தியில்
மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்க முன்னெடுப்புக்கள்  மற்றும்  இனங்களிடைய மேற் கொள்ள வேண்டியநல்லிணக்க ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகள் இங்குகலந்தோலாசிக்கப்படட்து.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான்,சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்க அமைப்பின்(PCA) தேசிய இணைப்பாளர் டி.இரஜந்திரன் , சமாதானநல்லிணக்க அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.மாஜீத் கல்முனை பிரதேச நல்லிணக்ககுழுவின் உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச மற்றும் அம்பாறை மாவட்ட ரீதியிலான சமூக,கலாச்சார அரசியல்,மத ரீதியாக நல்லிணக்கங்களை மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகள் பற்றியும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.