ஒரு இலட்சம் வேலைகள் வாகரை கதிரவெளியிலும் ஆரம்பிப்பு…

(சுமன்)
நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள் என்ற திட்டம் பிரதேச செயலகம் தோறும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை  பிரதேச  செயலகத்தின் 2022 வரவு செலவு திட்டத்தின் ஊடாக கிராமிய அபிவிருத்தி வேலை திட்டம் கதிரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதூர் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாகரை பிரதேச செயலாளார் பு.அருணன் தலைமையில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் வழிநடத்தலின் கீழ் கதிரவெளி கிராம உத்தியோகத்தர் க.உதயச்சங்கரினால் ஆரம்பிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொது மக்களாலேயே அடையாளம் காணக்கூடிய செயன்முறைகள் முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.