ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பில் “நீதிக்கான எங்களின் குரல்” நிகழ்ச்சித்திட்டம்.

சாவகச்சேரி நிருபர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்”நீதிக்கான எங்களின் குரல்” நிகழ்ச்சித்திட்டம் 19/02/2022 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது.
“நீதிக்கான எங்களின் குரல்” எனும் கருப் பொருளில் மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தை வலியுறுத்தி அரசியல்வாதிகளை அணுகும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன் மற்றும் சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் வாமதேவன் மற்றும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டு
 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்,சட்டவிரோத மணல் அகழ்வு,வாழ்வாதார உதவித் திட்டங்கள்,மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரக் கொடுப்பனவுகள், சமுர்த்திக் கொடுப்பனவுகளில் பாரபட்சம்,போதைப் பொருள் பாவனையால் சீரழியும் இளைய சமுதாயம்,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் குரல் கேட்கப்படாமை, முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக
 கேட்டறிந்து அதற்கான தீர்வுத்திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கி வைத்திருந்தனர்.
நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பெண்களால் 2020-2022 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.மேலும் குறித்த நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனப் பணிப்பாளர்,உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள்,பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்,பொது அமைப்புக்கள் என ஏராளமானோர் பங்கெடுத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்