நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல ...

மேலும்..

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால்  வாழங்கப்பட்ட 500 ரூபாய் கொடுப்பனவு  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை வழங்கப்படாது இருந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பாக  ...

மேலும்..

நேர்மையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டும் – ரிஷாட்

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

ஓமந்தையில் கிணற்றிலிருந்து செல்கள் மீட்பு!!

வவுனியா- ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு செய்துள்ளார். இதன்போது குறித்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், ...

மேலும்..

நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து

சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் ...

மேலும்..

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: பெண் உட்பட ஐவர் காயம்

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் ...

மேலும்..

வடமராட்சியில் குழு மோதல்- மூவர் காயம்

வடமராட்சி- கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடத்தனை கிழக்கு குலான் எனும் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

கருணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – சுமந்திரன்

கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோதே ...

மேலும்..

அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ...

மேலும்..

சந்திரிக்காவுக்கும் மங்களவுக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு சந்திரிகாவின் அத்தனகல்ல இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகச் சில தினங்களுக்கு முன்னர் மங்கள அறிவித்திருந்த ...

மேலும்..

கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் ...

மேலும்..

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கை

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ...

மேலும்..

இலங்கையில் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் சுற்றுலாத் தலங்கள்

தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு ...

மேலும்..

பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானின் ...

மேலும்..