வல்லைவெளியில் வெடிப்பு: இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை, பொலிஸார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது. வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திகை இன்று

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200  வாக்காளர்களைக் கொண்டு குறித்த தேர்தல் ஒத்திகை  இன்று நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

சஜித் இன்று நடுவீதியில் சகாக்கள் மூவர் விலகல் தேர்தலின் பின் பலர் மொட்டுவுடன் இணைவர் என்கின்றார் சேமசிங்க

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் போன்று அரசியலில் முன்னேறலாம் என்ற நோக்கத்திலேயே   முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாஸ ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார். ஆனால், இவரது நோக்கம் இன்று தோல்வியடைந்துள்ளது. அவர் இன்று நடுவீதிக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு ...

மேலும்..

நல்லாட்சியா? படுகொலையாட்சியா? ஆகஸ்ட் 5இல் மக்கள் தீர்மானிக்கட்டும்  ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

"இலங்கையில் நல்லாட்சி வேண்டுமா? அல்லது படுகொலையாட்சி வேண்டுமா? என்பதை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களின் ஆட்சி ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அடுத்த வாரம் முதல் பரப்புரைக்கு தயாராகின்றன பிரதான கட்சிகள் – தேர்தல் அறிக்கைகளும் தயாரிப்பு  

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து பிரதான அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பரப்புரைக்குத் தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் முதல் பரப்புரைகள் ஆரம்பமாகும் எனவும், தேர்தல் அறிக்கைகளும் தயாரிக்கப்படும் எனவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்து ...

மேலும்..

தமிழ், முஸ்லிம்களிடம் வாக்குகளுக்காக கையேந்தோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகின்றார்

"வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம்." - இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

வவுனியாநிருபர் வடமாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று (12.06) இடம்பெற்றது. அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா மாவட்டம் 21 ஆவது நிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டம் கல்வி ...

மேலும்..

தேர்தல் விதிமுறைகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது. தலைமன்னாரில் சம்பவம்.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) தேர்தல் விதிமுறைகளை மீறி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ் சம்பவம் புதன் கிழமை இரவு (10.06.2020) தலைமன்னார் பியர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சம்பவம் அன்று மன்னாரைச் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் ஆயுள்வேத கிழங்கு பிடுங்கியவர்கள் கைது!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். வாழைச்சேனை ...

மேலும்..

இணுவில், ஏழாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை

இந்தியப் புடவை வியாபாரியோடு தொடர்பில் இருந்த இணுவில், ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த  28 பேருக்கும் தொற்றில்லை என்று பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். ...

மேலும்..

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் – இப்படிக் கோருகின்றார் மஹிந்த

"தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்." - இவ்வாறு ...

மேலும்..

வடக்கில் கூட்டமைப்பு கோலோச்சும்! தெற்கில் ‘பெரமுன’ கொடி பறக்கும்!! – அடித்துக் கூறுகின்றார் பீரிஸ்

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும். அந்த வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவாகும்." - இவ்வாறு ...

மேலும்..

அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்பு தயார் நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான். எனவே, எமது மக்களுக்குத் ...

மேலும்..