பிரதான செய்திகள்

மலையக மக்கள் குறித்து பேச்சு நடத்த அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழு விஜயம்

மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி பேச்சு நடத்த இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி டிசைரி கோர்மியர் ஸ்மித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் திங்கட்கிழமை முதல் 15 ஆம் ...

மேலும்..

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரின் அநீதி நிறுத்தப்பட வேண்டும்!  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விவர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுகின்றன ...

மேலும்..

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவராவார். இவர் டுபாயிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை  3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ...

மேலும்..

வெள்ளையடிப்பு செய்த உலக தமிழர் பேரவை! கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு

சிங்கள பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றில் கையொப்பமிட்டதை அடுத்து உலகத் தமிழ் பேரவையுடனான சந்திப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது. மாவீரர் நினைவேந்தலின் போது அரசாங்கம் மக்கள் மீது மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கட்டவிழ்த்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 3டி மாடலிங் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்!

    தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3டி மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அதிநவீன 3டி பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் அண்மையில் வழங்கிவைத்துள்ளது. குறித்த கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக ...

மேலும்..

தேர்தல் மூலம் தனது இருப்பை பாதுகாக்க ஜனாதிபதி முயற்சி! சிறிதரன் சுட்டிக்காட்டு

தேர்தல் தொடர்பான விடயங்களில் தனது இருப்பைப் பாதுகாக்கவே ஜனாதிபதி விரும்புகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஜனாதிபதி ரணில் நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக இலங்கையில் முதன்முறையாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

மேலும்..

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்!  அமைச்சர் பியல் நிஷாந்த உத்தரவாதம்

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக இந்திய தூதுவருக்குத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வியெழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ...

மேலும்..

பொலிஸ் பதிவுநடவடிக்கைகளை கொழும்பில் நிறுத்த முடியாதாம்! அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரால் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குறித்த விண்ணப்பபடிவங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் வழங்கப்படுகின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ...

மேலும்..

உர மோசடிக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளது ? – சஜித் கேள்வி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இரசாயன உரங்கள் ஒரே நேரத்தில் தடை செய்யப்பட்டு சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தன்னிச்சையான முடிவால் நம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பாரியது என்றும், சில இழப்புகளை கணிப்பிட முடியாதுள்ளதாகவும்,இது தொடர்பாக, கணக்காய்வாளர் நாயக திணைக்களம் முறைப்படி ...

மேலும்..

போகம்பரை சிறைச்சாலையை நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டம் – திலும் அமுனுகம

போகம்பரை சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலையில் அதன் வரலாற்றுப் ...

மேலும்..

மிஹிந்தலை புனித பூமியிலிருந்து பாதுகாப்பு படையினரை நீக்க எடுத்த தீர்மானம் தவறு சஜித் கூறுகிறார்

மிஹிந்தலை புனித பூமியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய இருவரைக் கைதுசெய்த காரணத்தால், பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 250 உத்தியோகத்தர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது பாரிய குற்றமாகும். அது தொடர்பில் ...

மேலும்..

மீன்பிடித்துறையில் கௌரவமான தொழிலை ஊக்குவிப்பதற்கான வரைவு விதிமுறைகள்!

நாட்டின் மீன்பிடித்துறையில் கௌரவமான தொழிலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் மீன்பிடித்துறையில் பணியாற்றுதல் தொடர்பான சமவாயம் 2007 தொடர்பான வரைவு விதிமுறைகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்ககார, கடற்றொழில் ...

மேலும்..

இந்தியா பாதுகாப்பாக இருந்தால்தான் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்! அடித்துக் கூறுகிறார் இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில்; நடந்துகொள்ளவில்லை எந்த நாட்டிற்கும் ...

மேலும்..

வரி அதிகரிப்பின் மூலம் அரசின் வருமானத்தை 1.2 வீதமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்ப்பு ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகிறார்

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்து வருகின்ற நிலை மற்றும் நாட்டில் நிலவும் மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக அரசாங்கத்தால் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் மேற்கொள்ள இருக்கும் ...

மேலும்..