விளையாட்டு

தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும்: மிக்கி ஆர்தர்

அணி தோல்வியடைந்த சந்தர்ப்பங்களைப் பார்க்காது வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் ...

மேலும்..

சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு!

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின், அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரித்தானிய ...

மேலும்..

2016ஆம் ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற மே.தீ அணியை விட தற்போதைய அணியே பலமிக்கது: பிராவோ

கடந்த 2016ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை விட, தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியே பலமிக்க அணி என அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 ...

மேலும்..

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மேலும் ஒரு வருடத்திற்கு சங்கா நீடிப்பார்?

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை, இன்னும் ஒரு வருடம் நீடிக்க கழக நிர்வாகம் தீர்மானத்துள்ளது. கிரிக்கெட்டின் சட்டவிதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ...

மேலும்..

சிறந்த வீரராக உருவெடுப்பதற்கு இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும்: மார்னஸ் லபுஸ்சேன்

துடுப்பாட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும், சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான மார்னஸ் லபுஸ்சேன் தெரிவித்துள்ளார். உலகையே ...

மேலும்..

இங்கிலாந்து- அவுஸ்ரேலியா அணிகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும்: சங்கா வேண்டுகோள்

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைக்காலமாகவே சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தான் மண்ணில் விளையாட ...

மேலும்..

நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார்: ரிஷப் பந்த்

களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை டோனி தெளிவாக வைத்திருப்பார் என இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் டோனியுடன் விளையாடிய அனுபவம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரிஷப் பந்த் இதனைத் ...

மேலும்..

கெய்லின் குற்றச்சாட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்: சர்வான் விளக்கம்

ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கிறிஸ் கெய்ல் தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக அணியின் உதவி பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தெரிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நடப்பு சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்துஇ ...

மேலும்..

டெஸ்ட், ரி-20 கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முதலிடம்: அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. எனினும், தற்போது கொரோனா ...

மேலும்..

கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது: சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்துவருவதால், கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்ப்பதே சிறந்தது என சர்வதேச கால்பந்து சம்மேளன மருத்துவ குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள் கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், ...

மேலும்..

‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

கிரிக்கெட் உலகில் ‘ஹிட் மேன்’ என வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு இன்று (வியாழக்கிழமை) 33ஆவது பிறந்த தினம் ஆகும். இன்றைய நன்நாளில், அவர் எதிர்பார்த்திருக்கும் சாதனைகள் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், நோயற்ற வாழ்வை வாழ ...

மேலும்..

பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடர் இரத்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு இணங்க, பிரான்ஸின் முதன்மை கால்பந்து லீக் தொடரான ‘லீக்-1’ கால்பந்து தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் பயிற்சியை தொடங்கி ஜூன் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தி விடலாம் என ...

மேலும்..

உலக வழக்கத்தில் மாற்றம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு!

களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையை பயன்படுத்தும் உலக வழக்கத்தை, சர்வதேச கிரிக்கெட் சபை மாற்ற எண்ணி வரும் நிலையில், அதற்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கம் முடிந்து கிரிக்கெட் ...

மேலும்..

ஆர்.சி.பி. அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை: கோஹ்லி- டிவில்லியர்ஸ் பாச போராட்டம்!

ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லியும், ஏ.பி.டி வில்லியர்சும் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின் போதே டி வில்லியர்சும் விராட் கோஹ்லியும் இதனை தெரிவித்தனர். இதன்போது விராட் ...

மேலும்..

ஜூலை 1ஆம் திகதி வரை எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது: இங்கிலாந்து கிரிக்கெட்!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் ஜூலை 1ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்பட தெரிவித்துள்ளது. அதே வேளை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் சபை கூட்டத்தில், நடப்பு ...

மேலும்..