இலங்கை செய்திகள்

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையம் சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்- மே தினச் செய்தியில் அங்கஜன்

உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் ...

மேலும்..

உலகில் அருகிவரும் ஆமை இனமான ‘புலி ஆமை’ திருமலை கடலில் கரையொதுங்கியது!

உலகில் அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான ‘புலி ஆமை’ இனத்தினைக் சேர்ந்த கடல் ஆமை ஒன்று திருகோணமலை – கிண்ணியா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது. குறித்த ஆமையானது இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுவதோடு சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் ...

மேலும்..

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – ஜனாதிபதி!

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜீன் மாதம் 20 திகதி நாடாளுமன்ற ...

மேலும்..

அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க உறுதியேற்போம்- செல்வம் மே தின வாழ்த்து!

தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க தொழிலாளர் தினமான இந்நாளில் உறுதியெடுப்போம் என ...

மேலும்..

கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் 10 முதல் 15 இலட்சம் ...

மேலும்..

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய ...

மேலும்..

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். இந்தநிலையில் அவர்களை ...

மேலும்..

வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்களுக்கு விடுமுறை கோரிக்கை!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன், ஆளுநரின் பணிகளை ...

மேலும்..

பிரதமரின் அழைப்பினை நிராகரிக்க சஜித் தரப்பு தீர்மானம்!

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை நிராகரிப்பதற்கு சஜித் தரப்பு தீர்மானித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கள் கிழமை கூட்டம் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் சஜித் பிரேதமாச தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ...

மேலும்..

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” –  மேதின செய்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை அடக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்” என்பது மூத்தோர் வாக்கு. உலகத்தின் இயக்கத்தின் அத்தனை அங்கங்களிலும் ஒரு தொழிலாளியின் முயற்சியும், அந்த முயற்சியின் வெளிப்பாடான வியர்வைத்துளிகளும் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு பார் ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் TID விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம்!

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த ...

மேலும்..

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள தொலைபேசி சேவை!

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். 1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பான ...

மேலும்..

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி!

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..