இலங்கை செய்திகள்

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது: எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் காரணமாக கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது வாழ்க்கையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் திடீர் சாவு!

முல்லைத்தீவு,  கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர்  இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ...

மேலும்..

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 இளைஞர்கள் – சி.ஐ.டியினரிடம் சிக்கினர்

களுத்துறைப் பகுதியில் ஒரு கிலோ கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ...

மேலும்..

வவுனியாவில் இருந்து டுபாய் நாட்டுக்கு பப்பாசி ஏற்றுமதி!

வவுனியாநிருபர் வவுனியாவில் உள்ள பழச் செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட பப்பாசிகளை டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பி வைக்கப்பட்டது. வவுனியா, பம்பைமடு கமநல அபிவிருத்திணைக்களப் பிரிவில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவட்ட கடநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் நால்வருக்கு கொரோனா தொற்று-வைத்தியர் சுகுணன்

அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “கடற்படையினரால் ...

மேலும்..

மாநகர முதல்வரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி….

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களை நினைவு கூரும் ஓர் நன்நாளாக ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் திகதி சர்வதேச மே தினம் (தொழிலாளர் தினம்) அமைந்திருக்கின்றது. இந் நன்நாளில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நாளில் ...

மேலும்..

மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணித்தது ஜே.வி.பி.

அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) புறக்கணித்துள்ளது. இந்தப் புறக்கணிப்பை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். "நாளுமன்றம் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் பொலிஸ், அதிரடிப்படை கொலை வெறியாட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - மாளிகைத்திடல் அம்மன் கோயிலடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் மற்றும் கொட்டன்களுடன் இன்று காலை புகுந்த பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் அந்த வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் ...

மேலும்..

கந்தளாயில் மறை இறைச்சி, துவக்கு,தேன் மற்றும் இரும்புகளுடன் 31 பேர் கைது.

எப்.முபாரக்  திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு(30) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும்,தேன் போத்தல்களும்,மறை இறைச்சி வகைகள் மற்றும் ...

மேலும்..

பொலனறுவையில் கற்பாறைக்கு வெடி வைத்தவர் பலி!

பொலனறுவையில் கற்களை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலனறுவை, கலஹகல பிரதேசத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கருங்கல் அகழும் இடத்தில் கருங்கற்களை உடைப்பதற்காக குறித்த நபர் கல் வெடி வைத்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அக்கல் ...

மேலும்..

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை காலை 11.15 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதியை மாத்திரம் கலந்துகொள்ளச் ...

மேலும்..

தேசிய வெசாக் வாரம் பிரகடனம்!

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் ...

மேலும்..

கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் ...

மேலும்..

வவுனியா, பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பரிசோதனை!

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த 9 பேரிடமும் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (வியாழக்கிழமை) மாலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களிடம் பெறப்பட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..