இலங்கை செய்திகள்

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

ஜேர்மன் நம்மவர் உணவகத்தினால் தெல்லிப்பழையில் உதவித் திட்டம்!

ஜேர்மன் நம்மவர் உணவகத்தின் அனுசரணையில் ஆகீசன், கௌரீசன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழையில் துர்க்காபுரம், தந்தை செல்வா புரம் பகுதிகளில் உள்ள 23 குடும்பங்களுக்கு தலா சுமார் 2 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்தப் பொருள்களை வலி.வடக்கு ...

மேலும்..

விடுமுறையில் சென்ற கடற்படை தீவகத்தில் தனிமைப்படுத்தலில்! வெளியே செல்லாதமையை டக்ளஸ், அங்கஜன் உறுதிப்படுத்தவேண்டும்

தென்னிலங்கைக்கு விமுறையில் சென்ற கடற்படையினரை தீவகத்திலுள்ள கடற்படை முகாம்களில் தனிமைப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் முகாம்களைவிட்டு வெளியேறாமையை அரசில் அங்கம் வகிக்கின்ற எமது தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ், அங்கஜன் போன்றோர் உத்தரவாதமளிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மத்தியகுழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

தொழிலாளர் தினத்தில் பாரிய பட்டத்தை தயாரித்த இளைஞர்கள்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இளைஞர்களும், சிறுவர்களும்,  முதியவர்களும் தங்களது வீட்டு மேல்மாடியில் இருந்து கொண்டு பட்டம் ஏற்றுவது கிழக்கு மாகாணத்தின் அதிகமான பிரதேசங்களில் பிரதான பொழுதுபோக்காக காணப்படுகிறது.குறிப்பாக  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் அச்சட்டம் ...

மேலும்..

தொழிலாளர் வயிற்றில் அடித்து கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார்: எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான் தொழிலாளர் வயிற்றில் அடித்து  கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்   காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை(1)  மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

தொழிலாளர் தினத்தில் தொழிலாளரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது: கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த தொழிலாளர் தின நிகழ்வை சந்தோசமாக கொண்டாட முடியாத சூழ்நிலையிலும் அவர்களது வாழ்வே பாதுகாக்க வேண்டிய ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் மூவர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 6 ...

மேலும்..

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை தமது தங்குமிடமாக்கிய பொலிஸார்

வவுனியாவில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸாரின் தங்குமிடமாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் நேற்றிலிருந்து செயற்பட்டு வருகின்றது. கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் பல்வேறு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புக்களுடனும் ...

மேலும்..

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழை பகுதியில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேத்தாழை மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இளம் குடும்பஸ்த்தர் தனக்குத்தானே தீ மூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் ச.புஸ்பகுமார் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் நால்வருக்கு கொரோனா தொற்று-வைத்தியர் சுகுணன்

அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “கடற்படையினரால் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் மூவர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் குணமடைந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் இதுவரையில் 157 முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரையில் 666 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம்- அங்கு சிறிது பதற்ற நிலை!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு குடத்தனை மாளிகைத் திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாளிகைத் திடல் ...

மேலும்..