பிரித்தானியச் செய்திகள்

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ...

மேலும்..

பருவ நோய்த் தடுப்புத் திட்டம் தொடர்கிறது- சுகாதாரத் துறை பெற்றோருக்கு அறிவிப்பு!

பிரித்தானிய தேசிய சுகாதார சேவை இன்னும் அத்தியாவசியத் தடுப்பூசிகளை அளித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவதை தவறவிட வேண்டாம் என்றும் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாரும் கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டிருக்காதவரை, கிளினிக்குகள் மற்றும் பொது பயிற்சியாளர்களால் வழங்கப்படும் ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயணிகள் தங்கள் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, தளர்த்தப்படும்போது பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. எனினும், இதுவரை இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ...

மேலும்..

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அரசாங்கம் இழக்கும் அபாயம்!

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை, அரசாங்கம் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை 52,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் பொரிஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் ஒரேநாளில் 586பேர் உயிரிழப்பு- 3,996பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஒரேநாளில் 586பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட 329 கொரோனா வைரஸ் இறப்புகளை விட இன்று உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று நிலவரப்படி, 3996பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பிரித்தானியாவில் வைரஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய அழற்சி நோய்க்குறியால் இறந்துள்ளதாகவும் இது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் சுகாதார ...

மேலும்..

கொரோனா வைரஸ் எதிரொலி: 30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக 30,000 பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று பிரித்தானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறை எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் வழங்கல் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ரெண்ட் (டீசநவெ) ...

மேலும்..

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் மீட்பு திட்டம்: காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என கோரிக்கை!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முதலில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என 30 நாட்டு அரசாங்கங்களுக்கும் பிரித்தானியா வலியுறுத்தவுள்ளது. பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் முயற்சியில் 30 நாடுகளைச் ...

மேலும்..

ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 ...

மேலும்..

கொரோனா – 300,000 பேரிடம், நோய் எதிர்ப்பு சக்திச் சோதனை செய்ய, பிரிட்டன் திட்டம்.

பிரிடனின் மக்கள்தொகையில் எந்த விகிதத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளது மற்றும் அதன் விளைவாக எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய, 300,000 பேரைப் பற்றிய பெரிய அளவிலான ஆய்வை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை அறிய உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் ...

மேலும்..

இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்திலும் தீவிரமாகவே உள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ...

மேலும்..