July 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது…

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்  இன்றைய தினம் கிளிநொச்சி வலைப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது – கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சரவணபவன் வலியுறுத்து

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "2009ஆம் ஆண்டு இறுதிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது ...

மேலும்..

வாக்களிப்பை அதிகரித்தால் மட்டக்களப்பில் 4 ஆசனங்கள் – கூட்டமைப்புக்குக் கிடைக்கும் என்கிறார் சம்பந்தன்

"மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியே தீரும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு இரா.சம்பந்தன் நேற்று ...

மேலும்..

அமைச்சுப் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழரசுக் கட்சியின் கொள்கை அதுவல்ல என்று சம்பந்தன் இடித்துரைப்பு

"புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: கொழும்பிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று  மூடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்துக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட ஒருவருடன் தொடர்பினை வைத்திருந்தவர், வருகை தந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிருவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவித்தல் ...

மேலும்..

மாற்றத்தை விரும்புவோர் எங்களுடன் இணையுங்கள் – ஈ.பி.டி.பி

மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் என ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்   சி.கிரிதரன் தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. ஓமானில் இருந்த நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து ...

மேலும்..

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் சடலங்களாக கண்டெடுப்பு

பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த ...

மேலும்..

நீர்கொழும்பு வைத்தியசாலையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது

நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டியதால், ...

மேலும்..

வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் – மஹிந்த

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்  பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார். இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய ...

மேலும்..

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் ...

மேலும்..

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – கஃபே

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஒவ்வொரு பெண்ணினதும் பொறுப்பு என கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு குறித்த பயிற்சிப்பட்டறையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 07 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2646 பேரில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

கொரோனா தொற்று: தனியார் மருத்துவமனைக்கு தற்காலிக பூட்டு

கம்பஹா – றாகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அங்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: ஹோமாகமயில் 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

ஹோமாஹம பகுதியில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் வைத்தியர் மற்றும் மருத்துவ நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரும் காணப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அதாவது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த இரு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி ...

மேலும்..

சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

கொரோனா வைரஸ் நெருக்கடி பற்றிய தரவுகளை அரசாங்கம் மறைக்கிறது – கிரியெல்ல

கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பான ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து ...

மேலும்..

இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கடற்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு

ஓய்வுபெறவுள்ள கடற்படையின் 23ஆவது தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. மேலும் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் ...

மேலும்..

ஜோர்தானில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 285 பேர் நாடு திரும்பினர்

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே அரசின் நோக்கமாகும் – உதயகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள்…

கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவ காலத்தினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோள் உற்சவ காலங்களில் ஆலயத்தினை தரிசிப்பதற்கு வரும் அடியார்கள் ஆலயத்தில் இடம் பெறுகின்ற பூசைநிகழ்வுகளை கண்டுகளித்து அதன்பிற்பாடு அங்கு தங்குவதற்கு எவருக்கும் அனுமதி ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தல் – தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

(க.கிஷாந்தன்) நடைபெறவிருக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக 14.07.2020 அன்று அட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் ...

மேலும்..