May 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விலங்குகளை அச்சுறுத்தும் போலி கரடிகுட்டி( டெடிபெயார்)…

பாறுக் ஷிஹான் விலங்குகளின் அச்சுறுத்தல்களில் இருந்து விவசாயி ஒருவர் தனது வேளாண்மையை பாதுகாப்பதற்காக  டெடிபெயார் (போலிகரடி ) என்ற பொம்மையை வெருட்டியாக உபயோகப்படுத்தியுள்ளார். வேளாண்மை பயிர்செய்கை தற்போது பல்வேறு பிரதேசங்களிலும் பச்சை பசேல் என காட்சி தருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ...

மேலும்..

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் ...

மேலும்..

சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் முதிரைமரக்குற்றிகளை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த காவல்துறையினர் , இன்று (19) காலை வேலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தினை பம்பைமடுவில் கடமையில் நின்ற காவல்துறையினர் ...

மேலும்..

செல்பி எடுக்க முயன்ற இளைஞர் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து மரணம்!

மொனராகலை பிபிலை கரம்மிட்டிய மலைக்குச் சென்ற செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று, பிபிலை பொலிஸார் தெரிவித்தனர். பிபிலை மெதகம பிரதேசத்தைச் சேர்ந்ந 19 வயதான எ.எம்.அகில என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ...

மேலும்..

வவுனியாவில் பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு: இருவர் கைது

வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (19.05) காலை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து ...

மேலும்..

பல்கலைகழக விண்ணப்பம் கோரல் தொடர்பான அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும்..

முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு புதிய நியமனம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக முன்னாள் வடமாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்க நிலை மேலும் வலுவடைவதற்கான ...

மேலும்..

அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும்  எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும்  எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு  தெரிவித்துள்ளது. அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு ...

மேலும்..

போர்ட் சிட்டி விவகாரம் முஸ்லிங்களுக்கு நன்மை பயக்கும் விடயமாகவே அமையும் : முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

(நூருல் ஹுதா உமர்) இன்று எமது நாட்டில் பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவாதம் போர்ட்சிட்டி விடயமே. இந்த விடயம் தொடர்பில் பலரும் பாத, சாதக நிலைகளை பற்றி தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். உண்மையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ...

மேலும்..

நாட்டின் எதிர்கால பயணத்தை ஆசீர்வதிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி இச்சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுக்கின்றேன்

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தை நிறுவும் சட்டமூலத்தை இன்று இந்த சபையில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ...

மேலும்..

போகம்பர  சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று!

கண்டி-போகம்பர  சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின் போதே, 104 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 536 கைதிகளுக்கும் விரைவாக பி.சி.ஆர் ...

மேலும்..

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் ;மூவர் கைது!

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான ...

மேலும்..

வாகன விபத்துக்கள் மீண்டும் அதிகரிப்பு -அஜித் ரோஹண

வாகன விபத்துக்களில் மீண்டும் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கமைய நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 3 பேர் நேற்று (18) ...

மேலும்..

நேற்று 38, 263 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!

இலங்கையில் நேற்று 38, 263 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அஸ்ட்ராசெனெகா இரண்டாம் மாத்திரை தடுப்பூசிகள் 5,229 பேருக்கும், சினோபாம் முதலாம் மாத்திரை தடுப்பூசிகள் 33, 017 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி ...

மேலும்..

டயகம வைத்தியசாலையின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இன்று (19) உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி  ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார். நுவரெலியா டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இன்று ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஜோப்ரெட் வர்கீஸ் ...

மேலும்..

இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது

இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இலங்கையில் நேற்றைய (18) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார். இதற்கமைவாக ,இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ...

மேலும்..

அதர்வாவுக்கு ஜோடியான சசிக்குமார் பட நடிகை

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சசிகுமார்.இவரது நடிப்பில் உருவான படம் பிரம்மன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா. இவர் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு சினிமாவில் அந்தாள் ராட்சசி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. இவர் ...

மேலும்..

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் தற்போது நாட்டில் இல்லை – பந்துல குணவர்தன

புற்றுநோயை ( Aflotoxin) ஏற்படுத்தக்கூடியது என்று கடந்த காலப்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

உலக கொவிட் பாதிப்பு 16.48 கோடியை கடந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.48 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.64 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை ...

மேலும்..

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு ...

மேலும்..

இலங்கை உள்ளிட்ட 3நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

இலங்கை உள்ளிட்ட 3நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

நாகப்பாம்புக்கே பயப்படாத நான் நாக்குளி பாம்புகளுக்கு பயப்பட போவதில்லை : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில்

நாகப்பாம்புக்கே பயப்படாத நான் நாக்குளி பாம்புகளுக்கு ஒரு போதும் பயப்பட போவதில்லை. நான் இங்கு அரசியல்வாதி இல்லை ஒரு அதிகாரி என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று(18)  சபா மண்டபத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

 (க.சரவணன்) மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய 10 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பொலிஸார் ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளுக்கு நிதியுதவிகளை பெற்று கொடுக்கவும் –  பிரதமர் 

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) பாராளுமன்ற குழு அறை 02 இல் இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

“காட்டுச் சட்டத்தின் மூலம் குற்றமிழைக்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளேன்; ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் தட்டிக்கேட்க வேண்டும் என ரிஷாட் எம்.பி கோரிக்கை!

எந்தவிதமான குற்றமும் இழைக்காத தன்னை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்தும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 25 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் ...

மேலும்..