February 16, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை கல்லாற்று பொறுப்பதிகாரிக்கு சேவை நயப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாற்று பிராந்திய நிலைய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம்  விஜயசாந்தனுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் கல்லாறு பணிமனையில் இருந்து காரைதீவு பணிமனைக்கு இடமாற்றம் ...

மேலும்..

நாவிதன்வெளியில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. அறநெறி பாடசாலை கல்வியின் அவசியம், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ...

மேலும்..

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

(அஸ்ஹர்  இப்றாஹிம்) இந்த வருடத்திற்கான  முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர்  மஸ்தானின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், ...

மேலும்..

யாழ். போதனாவில் டிஜிற்றல் தொடு திரை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிற்றல் தொடு திரை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. இவ் டிஜிற்றல் தொடுதிரையில் பொதுமக்கள் வைத்தியசாலை தொடர்பான தவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்கள் தெரிவுகளாகவே முன்மொழிவு திரட்டல்! அமைச்சர்’ டக்ளஸ் தெரிவிப்பு

சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளன என அமைச்சர்' டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ...

மேலும்..

மட்டக்களப்;பு தன்னாமுனையில் விபத்து காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் பலி! மேலும் 3 பேர் வைத்தியசாலையில்

(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில்   இடம்பெற்ற வாகன  விபத்தில் ஓட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காத்தான்குடியை சேர்ந்த ஓட்டோவே இந்த விபத்தில் சிக்கி உள்ளது. மேற்படி விபத்தில் ஓட்டோவில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட 43 தமிழக மீனவர்களையும் ஜீவன் நேரில் சந்திப்பு!

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வைக் காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள ...

மேலும்..

வவுனியாவில் பொலிஸாரால் 32 வயது இளைஞன் கைது

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில ...

மேலும்..

நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வவுனியா ரயில் நிலையத்தில் வசதிகள்!

பயணிகளின் நலன் கருதி வவுனியா ரயில் நிலையத்தில் நூலக வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. அதிகளவிலான பயணிகள் தினமும் வந்து செல்லும் வவுனியா, ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட இதர ...

மேலும்..

உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் நிவாரணம் வழங்கல்

(அஸ்ஹர் இப்றாஹிம்) உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில்  இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 1262 குடும்பங்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் நிவாரணப் பொதிகள் வழங்கி ...

மேலும்..

சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலை வித்தியாரம்ப விழா!

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட  உடங்கா  01 கிராம சேவையாளர்  பிரிவில் அமைந்துள்ள ஸம் ஸம் பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின்  வித்தியாரம்ப விழா  சம்மாந்துறை அல் அர்சத் பாடசாலை கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. மேலும் 2024 ஆம் ஆண்டில் புதிதாக  இணைத்துள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஏடு ...

மேலும்..

மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்!

(எஸ்.அஷ்ரப்கான்) மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் வெள்ளிக்கிழமை ...

மேலும்..

வவுனியா – பூவரசன்குளம் பொலிஸாரால் இருவர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களிடம் ...

மேலும்..

சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைதுசெய்யுமாறு உத்தரவு!

பாறுக் ஷிஹான் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு  கைது செய்து மன்றில்  முன்னிலைப்படுத்துமாறு  பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்  குறித்த வழக்கின் பிரதான சந்தேக நபரான மௌலவியை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கு வியாழக்கிழமை ...

மேலும்..

தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

(கிண்ணியா நிருபர் ) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில்  சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நேற்று  (வெள்ளிக்கிழமை) காலை ...

மேலும்..

மட்டக்களப்பிற்கு அதாவுல்லா வரக்கூடாது சொல்லும் சாணக்கியன் முட்டாளாவார்! சீறுகிறது கிழக்கின் கேடயம்

மாளிகைக்காடு செய்தியாளர் கிழக்கு மாகாணத்தை பற்றி எதுவுமே தெரியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சகோதரர் செந்தில் தொண்டமான் கிழக்கை ஆளும்போது இம்மாகாணத்தில் பிறந்து அதன் சுதந்திரமான சுவாசத்திற்கு பாடுபட்ட ஒருத்தரை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள என்ன ...

மேலும்..

தேசிய திட்டமிடல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்பிற்கு இணங்க தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பனவற்றிலிருந்து பணிப்பாளர்கள் மற்றும் பிஎஸ்எஸ்பி செயல்திட்ட அதிகாரிகள்  தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு  கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

(கிண்ணியா நிருபர் ) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில் சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ...

மேலும்..

உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை பாடசாலைகளுக்கு சூட்டுவதற்கு தடை! கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அதிரடி

(ஏ.எம்.ஆஷிப்) உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணித்துள்ளார். இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகள் மற்றும் கட்டடங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இது விடயத்தில் உடனடி நடவடிக்கை ...

மேலும்..

மன்னார் அழகு நிறைந்த பிளமிங்கோ பறவைகள்!

ஹஸ்பர் ஏ.எச் புலம்பெயர்ந்த பறவைகள் ஃபிளமிங்கோக்கள் இலங்கை மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வது அறியப்படுகிறது. இந்த இடம்பெயர்ந்த பறவைகளுக்குள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் ...

மேலும்..

5 மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை ஏற்று திருக்கோவில் மக்களுக்கு வீடுகள் வழங்கல்! ஆளுநர் செந்திலுக்குப் பாராட்டு

ஹஸ்பர் ஏ.எச் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்  வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த  மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பெண்கள் மீண்டெழ உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு! செட்டிகுளம் – காந்திநகரில்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செட்டிகுளம், பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டில் பல வருடங்களாக பயன்படுத்தப்படாது இருந்த கட்டடம் மக்களின் பொருளாதார ...

மேலும்..

இராணுவத்தினரின் நலனை மேம்படுத்த புதிய திட்டங்கள்

இராணுவத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் நலனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல நிகழ்ச்சிகள் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றன. அதன்போது, இராணுவ உறுப்பினர்கள், ...

மேலும்..

ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்!

நூருல் ஹூதா உமர் பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிந்தனையின் கீழ் ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் வியாழக்கிழமை கலை கலாசார பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ...

மேலும்..

தேடலில் வந்த தோழன் கவிதை நூல் வெளியீடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிரின்  தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு  திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் நஜ்முல் ...

மேலும்..

தேசிய புலனாய்வு பிரிவிற்கு வவுனியாவில் காணி வழங்குமாறு ஆளுநர் பரிந்துரை! மாவட்ட ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் பரிந்துரைத்துள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு வியாழக்கிழமை எதிர்ப்பு வெளியிடப்பட்டது. காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம், தெங்கு ...

மேலும்..

கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி நடமாடும் கண்சோதனை

  அபு அலா - கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நலன் கருதி, கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்பரிசோதனை நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை கோபாலபுர முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. கொழும்பு கண்பரிசோதனை நிலையத்தின் கண்பரிசோதனை வைத்தியர் ஆர்.அருன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடமாடும் கண்பரிசோதனையில் கண்பார்வை குறைபாடு, குறும்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் ...

மேலும்..

கல்முனை கார்மேல் பற்றிமாவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா!

  ( வி.ரி.சகாhதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.. முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக ...

மேலும்..