இலங்கை செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் ...

மேலும்..

சி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய ...

மேலும்..

தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்!

பாறுக் ஷிஹான் வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை  எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான்  நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு ...

மேலும்..

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இரு குளக் காணிகளை மீட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம்

வவுனியாநிருபர் வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்ட வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் இன்று இரண்டு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைந்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கமநல அபிவிருத்தி ...

மேலும்..

தனியாக வவுனியா பல்கலைக்கழக விடயங்களை கையாள உறுப்பினர் நியமனம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா வளாகம் தற்போது வரையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குரியதாகும். இந்நிலையில் அதனை தனியான பல்கலைக்கழகமாக மாற்றும் ...

மேலும்..

தமிழரசின் சுயநலத்துக்காகவே சசிகலா பயன்படுத்தப்படுகிறார்! ஆதங்கப்படுகின்றார் அனந்மி

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் ...

மேலும்..

சில தமிழரின் உணர்வற்ற செயலால் பலமடைகின்றன சிங்களக் கட்சிகள்! வேதனையுறுகின்றார் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகவும். இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

தமிழர் தாயகத்தை சிதைக்க கோட்டா கங்கணம்: மாவை கண்டனம்!

"வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. தமிழர்களின் எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நிறைந்த இந்தப் புனித பூமியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும், சிங்களக் கடும்போக்காளர்களும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியோம். ...

மேலும்..

ட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்!

ட்ரோன் கமராவின் உதவியுடன்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை)  அதிகாலை கிடைத்த தகவலின்   மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் ...

மேலும்..

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக, மத்திய வங்கி மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.

மேலும்..

மணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 40க்கும் ...

மேலும்..

எழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்

அனலைதீவு, எழுவைதீவு இரண்டிற்குமாக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை சேவையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘எழுதாரகை’ சேவையில் ஈடுபடாமைக்கு அப்போதைய அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே ...

மேலும்..

பொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தொடர்ந்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தேர்தலை நடத்த முடியும் என்று ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை!

இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் ...

மேலும்..

சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட ...

மேலும்..