இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதை ...

மேலும்..

இராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார். அத்துடன், இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கல்வியின் ...

மேலும்..

கிரானில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பாலத்தில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். நேற்று மாலை கிரான் -புலிபாய்ந்தகல் வீதியால் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமே இவ்வாறு ஆற்றினுள் பாய்ந்துள்ளது. இதன்போது அப்பகுதியில் ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்

ஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்தார். பிரதி கணக்காய்வாளர் ...

மேலும்..

மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் வகுப்புகள் உள்ளிட்ட மாணவர்களை ஒன்றுதிரட்டி வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வகுப்புக்களையும் உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்தல் வழங்கியுள்ளது. குறித்து அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

இ.தொ.கா. கட்சிக்குள் குழப்பம் இல்லை: பொதுத் தேர்தலின் பின்னரே புதிய தலைவர்- கனகராஜ்

கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானித்த திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்களின் அபிப்பிராயத்தை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறிகள் ...

மேலும்..

யாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள்,கம்பரேலியா பாதைகளிலில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சடடத்திற்கு விரோதமான செயற்பாடு இதனை ...

மேலும்..

யாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். அரச அதிபர் ஊடாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கான மகஜரை இன்று (புதன்கிழமை) அரச அதிபரிடம் கையளித்தனர். குறித்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போதுவரை ஆயிரத்து 397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரையில் 740 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஆயிரத்து 915 ...

மேலும்..

தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார். ” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைத் ...

மேலும்..

பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, ...

மேலும்..

தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். சென்னையில் இருந்து வருகை தந்துள்ள குறித்த இலங்கையர்கள் 51 பேருடன் ...

மேலும்..

சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை!

கடந்த ஏழு மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணணி உதவியாளர்கள் இந்த ...

மேலும்..