இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரத்தை பாவிப்பதற்கு ஜனாதிபதி முற்படுகிறாரா? வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி…

முள்ளிவாய்க்காலில் மே 18 ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் எமது தமிழினப் போராட்டத்தை அகிம்சை போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது அந்த கடமையானது ஈழத்தமிழர்கள் உட்பட  அதிகப்படியான உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது  அந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் ...

மேலும்..

சீரற்ற வானிலை – ஆயிரத்து 433 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 992 பேரில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே ...

மேலும்..

திருகோணமலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு…

சேர்விங் ஹியுமானிட்டி அமைப்பின் கொவிட் 19  நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலை சர்வமத பேரவையின்(எல் ஐ ஆர் சி) இன்   ஏற்பாட்டில் திருகோணமலை விபுலானந்தா பாடசாலை மைதானத்தில் இன்று(19) வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு  குடும்பங்களுக்கான ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கு அரியநேத்திரன் தலைமையில் வணக்கநிகழ்வு இடம்பெற்றது…

மட்டக்களப்பில் இலங்கைதமிழரசுகட்சி பணிமனையி முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவு நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்ததை அடுத்து உடனடியாக இலங்கை தமிழரசுகட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் மட்டுநகரில் வேறு ஒரு இடத்தில் சென்று தமிழ்தேசியகூட்டமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் 11,ம் ஆண்டு ...

மேலும்..

காரைதீவில் கடல் சீற்றத்தினால் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு…

19/05/2020 இன்று அதிகாலை காரைதீவு கடற்கரை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் வேகத்தினால் கடற்கரை விதிகளைத் தாண்டி தண்ணீர் பரவுவதினால் கடற் தொழில் உரிமையாளர்கள் தமது தோணி,படகுகளை விதிகளுக்கு அப்பால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக இருந்தது. மேலும் நிந்தவூர் பகுதிகளிலும் பல இடங்களில் கடல் ...

மேலும்..

ஜனாதிபதி யுத்த வெற்றிநாள் வாழ்த்து செய்தி

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் – ஜஸ்மின் சூக்கா

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவெந்தலின் 11 வது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ...

மேலும்..

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் – ஜஸ்டின் ட்ருடோ

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாகவே தனது ...

மேலும்..

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 98 பேர் இன்று வெளியேறினர்!

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று(செவ்வாய்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6 மாத குழந்தை ஒன்று உள்ளிட்ட 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 22 நாட்கள் ...

மேலும்..

வெளிநாட்டு கப்பற்துறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் வாய்ப்பு குறித்து அவதானம்!

கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். தெற்கு கடல் மார்க்கமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் பயணம்செய்யும் உலக நாடுகளின் கப்பல்களில் சேவையில் ...

மேலும்..

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை – ஜனாதிபதி

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும். செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் ...

மேலும்..

கல்முனையில் எம்.இராஜேஸ்வரனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு …..

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2020) எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாணவர் மீட்பு பேரவை தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஸ் இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவில் ஐ ஓ சி எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் அரசாங்கம் எரிபொருள் விலையில் அதிகரிப்பை செய்வதற்கு தீர்மானித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ...

மேலும்..