இலங்கை செய்திகள்

இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது

(க.கிஷாந்தன்) ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறிய ரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன ...

மேலும்..

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றும் திட்டமில்லை! – இராணுவத் தளபதி வாக்குறுதி

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலைகளை அரசு தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றி வருகின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ...

மேலும்..

‘கொரோனா’வின் பிடிக்குள் 143 கடற்படையினர் இலக்கு – மக்கள் அச்சப்படக் கூடாது என்கிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார். நேற்று மட்டும் 53 கடற்படையினர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் கடையொன்றில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முபாரக் புடவைக் கடையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள கடைகளுக்கு தீ ...

மேலும்..

பெண்ணொருவரை மாவட்டம் விட்டு மாவட்டம் அழைத்துவந்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து ...

மேலும்..

அவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு?

நிலமையை சமாளிக்க இலகுவான வழியிருந்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட பயப்படுவது ஏன்? வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் பெறப்படும் கொரோனா நிவாரண நிதிக்கு நடப்பது என்ன? தேர்தல் திகதி பிற்போட்டமை விடயத்தில் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ளாமல் விட்டதா தேர்தல்கள் ஆணைக்குழு? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் அரசியலமைப்பு ...

மேலும்..

நாடு முழுவதிலும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ...

மேலும்..

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த ...

மேலும்..

நேற்றுமட்டும் 71பேருக்கு கொரோனா – நோயாளிகளின் எண்ணிக்கை 523 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகளவு நபர்கள் பதிவான நாளாகும். இதேவேளை ...

மேலும்..

2018 .இல் பெற்ற வரலாற்றுத் தீர்ப்பை 2020 இலும் சுமந்திரன் பெறுவாரா….?

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால், அரசைக் கவிழ்க்க முயற்சிக்காமல், அரசின் சட்டபூர்வமான எந்தச் செயற்பாட் டுக்கும் தடங்கல் கொடுக்காமல், முழு ஆதரவு அளிக்கத் தயார் என்ற உறுதிப்பாட்டைத்  தெரிவிக்கும் கடிதத்தை கூட்டு எதிரணிகள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கவுள்ளன. இந்தக் கடிதத்தில் ...

மேலும்..

கொரானா கெடுபிடியிலும் புலிக்கொடி ஏந்தி….!

கோவிற்-19 என்ற உயிர் கொல்லி நோய் பரம்பலுக்கு உயிர் ஆபத்து மத்தியில் மக்களுக்கு ஊழியம்(சேவை) செய்யும் இன்றியமையாத ஊழிய முன்நிலை ஊழியர்கள் நாடுகடந்த தமிழீழ அரசால் பெருமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஈடு இணையற்ற ஊழியத்தை பெருமைப் படுத்துமுகமாக தமிழ் மக்கள் சார்பில் அவர்களுக்கு ...

மேலும்..

யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. நாவலர் வீதி ஆனைப்பந்தி சந்தியில் சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த போதும் ...

மேலும்..

கொரனா சந்தேகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..

கொரனா  தொற்று சந்தேகத்தில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை வைத்தியசாலையில் ...

மேலும்..