இலங்கை செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வைப்பு.

கொரொனா நோய் பரவலின் மத்தியிலும் பணி புரியுந்துவரும் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி ஊழியர்களின் ஆரோக்கியத்தினை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. கோவிட் 19 எனும் கொரொனா நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை ...

மேலும்..

பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1172 எனும் விமானம், மாணவர்களுடன் ...

மேலும்..

மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (28.04.2020)  ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மக்களுடைய நடமாட்டம் முன்னையதைவிட மிகவும் குறைவாகவே காணப்பட்டது நேற்றையத் தினமhகிய செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் குறித்த சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது இதில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும். ஆனாலும் ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – இதுவரை 592 பேர்…!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் இன்று குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா ...

மேலும்..

பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும்கூட தற்போது கொரோனா ...

மேலும்..

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.!

மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தற்போது கொரோனா நோயாளிகளாக 588 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா ...

மேலும்..

வவுனியாவில் ஊரடங்கு தளர்வு குறித்து பொதும

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளமை குறித்து பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பொதுமக்களுடன் ...

மேலும்..

விடுமுறையில் சென்று வரும் இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது ! – மாவை

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் மக்கள் அதிகமாக வாழ்வதனால் அங்கு இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொது மக்கள் அதிகளவாக இருக்கும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள ...

மேலும்..

மக்கள் செறிந்துவாழும் இடத்தில் தனிமைப்படுத்தல் மையம் வேண்டாம் – மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கின்றார் சித்தார்த்தன்

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என சுட்டிக்காட்டியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இத்தகைய முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரியுள்ளார். யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் படையினரை ...

மேலும்..

இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டங்களை பொற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய ...

மேலும்..