இலங்கை செய்திகள்

மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான் மாடுகள் அறுக்கப்படுகின்ற 6 மடுவங்களை ஆராய்ந்த பின்னர் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது ...

மேலும்..

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவர் சம்மாந்துறையில் விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை(28) மாலை சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்ட விசேட அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ...

மேலும்..

போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம்!

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தத்தில்  மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கொரோனா ...

மேலும்..

அம்பாறையில் 3ஆக உயர்ந்தது கொரோனாத் தொற்றாளர்கள்! – கண்டியிலும் 13 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 மாவட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களின் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கை அம்பாறை மாவட்டத்தில் 03ஆகவும், கண்டி மாவட்டத்தில் 13 ஆகவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 12ஆகவும் ...

மேலும்..

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது

(க.கிஷாந்தன்) பத்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் பொழுது சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.   சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார் 29.04.2020 அன்று காலை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ...

மேலும்..

மட்டு ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநககர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தந்தை செல்வாவின் 43வது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினமானது இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார ...

மேலும்..

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாய் ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த ...

மேலும்..

மேலும் 03 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 622 ஆனது

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது 481 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 134 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பகுதி விடுவிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசம் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

அபாயகரமான வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சுதேச மருத்துவம்- மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர்

அபாயகரமான வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாள்தோறும் மோர் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண சுதேச ...

மேலும்..

அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர், மக்கள் அச்சமடைய தேவையில்லை..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு வெலிசர கடற்படை முகாமில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்றுநோய் மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கடற்படையினரில் சிலருக்கு ...

மேலும்..

யாழில் 4 ஆரம்ப பாடசாலைகளில் கொள்ளைச் சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனாவிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – அனில் ஜாசிங்கவுடனான சந்திப்பில் மீண்டும் ஐ.தே.க. வலியுறுத்து

ஐக்கிய தேசியக் கட்சியினர் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை உறுதியளித்துள்ளனர். அந்தவகையில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேர்ந்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுகாதார ...

மேலும்..