இலங்கை செய்திகள்

321ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 310 இலிருந்து 321 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

மேலும்..

தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்ய ஆணைக்குழு தீர்மானம் – மஹிந்த

ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி மீண்டும் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் ...

மேலும்..

மேலும் 02 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை!

வவுனியா நகரில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் நிதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் குடும்பங்களின் அன்றாட வாழ்வு நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளைப் பல்வேறு தரப்பினரும் செய்துவருகின்றனர். அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சருமான ...

மேலும்..

நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர் இந்தியாவிலுள்ள இலங்கை மாணவர்கள்!

இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இவ்வாறு நாளைய தினம்(வியாழக்கிழமை) அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 443 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த அனைவரையும் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 14 சிறப்புக் குழுக்கள் விசாரணை – 92 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை 14 சிறப்புக் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஊடாக 92 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்த 412 பேர் வீடு திரும்பியுள்ளனர்!

இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து, வீடு திரும்பியுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா அச்சத்தை அடுத்து, இராணுவ முகாம்கள் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் முகாம்களில் ...

மேலும்..

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் – வாசுதேவ

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே, எதிர்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் என முன்னாள் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்தநிலையில் ...

மேலும்..

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன், அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் – ரவி கருணாநாயக்க

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட ...

மேலும்..

தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் – அகில விராஜ் காரியவசம்

பொதுத்தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், ...

மேலும்..

யாழில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கொள்ளை – 5 பேர் கைது

வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற வெவ்வேறு 4 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச்சீட்டுக்கள், மற்றும் ...

மேலும்..

COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த – ஜப்பான் 1.2 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கையில் COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சம்மேளனம் ஆகியவற்றினூடாக 1,212,500 அமெரிக்க டொலர்கள் (சுமார் 230 மில்லியன் ரூபாய்) தொகையை ...

மேலும்..

சம்மாந்துறையில் மதுபோதையில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது!

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று(திங்கட்கிழமை) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு ...

மேலும்..