இலங்கை செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 09 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 820 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் பிற்பகல் 04 மணி வரையிலான 18 மணி நேர காலப்பகுதிக்குள்ளாயே இவ்வாறு நீர் நீர்வெட்டு ...

மேலும்..

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகர் உயிரிழப்பு!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது ´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்திய இலங்கைக்கு பாகிஸ்தான் பாராட்டு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிரான இலங்கை சிறந்த முறையில் செயற்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு  இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு ...

மேலும்..

பொறுப்புகூறல்: இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் பிரிட்டன் அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அகமட் பிரபு, தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி, ...

மேலும்..

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை  விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு ...

மேலும்..

விலை போகும் வேட்பாளர்கள் எம்மிடம் இல்லை – சஜித்!

பணத்திற்கு விலை போகக்கூடிய எந்தவொரு வேட்பாளர்களும் தங்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பணத்திற்கு விலை போகக்கூடிய வேட்பாளர்கள் அனைவரும் ...

மேலும்..

படையினரை காப்பாற்ற கருணாவின் கருத்தை ஆதாரமாக பயன்படுத்துங்கள்: ஜனாதிபதியிடம் பிக்குகள் அமைப்பு கோரிக்கை

சர்வதேசத்தில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு கருணா வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில்  2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக  கருணா அம்மான், ...

மேலும்..

அரசை பாதுகாப்பதற்கே சர்சையான கருத்தை கருணா அம்மான் வெளியிட்டுள்ளார்- ரணில்

மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக  கருணா அம்மான்   கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என  ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், ரணிலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே ...

மேலும்..

புலிகளின் மறுவடிவம் தமிழ்க் கூட்டமைப்பே! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்று மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். "புலிகளை அழிக்க உதவிய இந்தியா, புலிகளின் மறுவடிவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவ முன்வரமாட்டார்கள்" எனவும் ...

மேலும்..

’19’ திருத்தத்துக்கு முடிவுகட்டவே மூன்றிலிரண்டு கோருகின்றோம் உண்மையைக் கூறியது மஹிந்த அணி

"பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான  முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம். நிறைவேற்றுத்துறையைப் பலவீனப்படுத்தவே 19ஆவது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டுவரப்பட்டது." - இவ்வாறு மஹிந்த அணியின் ...

மேலும்..

நவீன் ஒரு விஷமி! ஐ.தே.கவை அவரே பிளவுபடுத்தினார் என்று இராதா பகிரங்க குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்கதான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கடந்த 5 ஆண்டுகால முன்னேற்றங்களையும் உள்ளடக்கியே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும்: மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல் திரட்டுகின்றார் கோட்டா – விமல் தெரிவிப்பு

"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றார்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ...

மேலும்..