இலங்கை செய்திகள்

சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சி பின்வாங்கமாட்டோம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஊடக கண்காட்சிகள் என சிலர் விமர்சிக்கின்றனர். இதுபோன்ற சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சப்போவதில்லை. இவ்வாறு செய்தால் நாம் அச்சமடைந்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாமல் பின்வாங்குவோம் என நினைக்கின்றனர். நான் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வரையில் பாதாளக் குழுக்களை ...

மேலும்..

குற்றங்களை 50 வீதமாக குறைக்க எம்மால் முடியும் தேசபந்து தென்னக்கோன் சபதம்

குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளன. தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாகக் குறைக்க முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு - பாரியளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன எனக் ...

மேலும்..

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் சிக்கின!

சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 1,955 கிலோ பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நுரைச்சோலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்குச் சொந்தமான கடற்படை கப்பலான ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார்! மைத்திரிபால பகிரங்கம்

  கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளார் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்தடைந்தமைக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவான பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ...

மேலும்..

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள்கள் விற்பனை! மருந்தகத்தின் உதவியாளர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, ...

மேலும்..

மன்னம்பிட்டியில் பாலத்துக்குள் வாகனம் குடைசாய்ந்து விபத்து

பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக கூலர் வாகனமொன்று ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது. ஞாயிறு நண்பகல் மன்னம்பிட்டியில் உள்ள பாலத்துக்கருகில் வைத்து வாகனத்தின் டயர் வெடித்ததில் பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது. எனினும், வாகன சாரதியின் துரித செயற்பாடு காரணமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படாத ...

மேலும்..

காட்டு யானையையும் மரத்தையும் மோதி விபத்துக்குள்ளானது பஸ்! நால்வர் காயம்

தனியார் பயணிகள் பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மகஇலுப்பள்ளம விதை ஆராய்ச்சி நிலையத்துக்கு  அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ...

மேலும்..

முல்லைத்தீவில் 7 நாட்களில் 113 போதைப்பொருள் பாவனையாளர்கள் உட்பட 250 பேர் கைது : 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!

நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்புகள், கைது நடவடிக்கைகள், போதைப்பொருட்கள் மீட்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேள‍ை சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரினால்  முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்று அதிகாலை 4.30 மணியளவில் முல்லைத்தீவில் ...

மேலும்..

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் காரில் மோதினர்!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு, மற்றொருவர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் இந்த ...

மேலும்..

பொலிஸாரின் விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன! யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெருமிதம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் - கடந்த சில ...

மேலும்..

மன்னார் மாவட்ட அரச அதிபராக பொறுப்பேற்றார் க.கனகேஸ்வரன்!

மன்னார்  நிருபர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக க.கனகேஸ்வரன் அவர்கள் கடமையாற்றிய நிலையில் சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் கடந்த 21 திகதி பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து  நியமனக் கடிதத்தை ...

மேலும்..

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி: பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி ...

மேலும்..

இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்து யுவதிக்கு கிடைத்தது இடம்!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அக்கடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட ...

மேலும்..

பண வீக்கம் அதிகரிப்பினால் பெரும் கஷ்டத்தில் மக்கள்! பேராசிரியர் எச்சரிக்கை

பணவீக்கம் அல்லது பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது நிச்சயமற்றது என பேராதனை பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

13 திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூட்டமைப்பினரின் வலியுறுத்தல் வரவேற்கத்தக்கதே! ஈ.பி.டி.பி. ரங்கன் தெரிவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி ...

மேலும்..