உலகச் செய்திகள்

கொரோனா ஊரடங்கால் வேலைகளை இழந்த அகதிகள் …

ஆஸ்திரேலியா: கொரோனாவை சமாளிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக பல்வேறு விதமான உளவியல் சிக்கல்களையும் பொருளாதார பிரச்னைகளையும் உருவாகியுள்ளதை மறுக்க இயலாது. அந்த வகையில், மெல்பேர்ன் வடக்கு பகுதியில் வசிக்கக்கூடிய அகதிகள் கடும் வேலை இழப்புகளையும் ...

மேலும்..

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக (27) மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய ...

மேலும்..

தியாகத தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு உணவுக் கொடை…

தியாகத தீபம் திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்க் குடிமை செயலகம் (Tamil Canadian Center for Civic Action) நடத்திய உணவு வங்கிகளுக்கான உணவுக் கொடைத் திட்டத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனை 3050 ...

மேலும்..

ஆப்கானில் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை: அமெரிக்கா?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் ...

மேலும்..

தமிழர்களை புறக்கணிக்கின்றதா ஐ.நா?

ஐ.நா மனித உரிமைகள் சபை தனது அறிக்கைகளில் ‘தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்’ என்கின்றதான பதத்தை வேண்டுமென்றே தவிர்த்துவருவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மறுபக்கம் ஐ.நா போன்ற ஒரு பெரும் கட்டமைப்பு அப்படி தமிழ் தமிழ் என்று தனது அறிக்கைகளில் கூறிக்கொண்டிருக்காது என்று ...

மேலும்..

அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்: ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள்  நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக ...

மேலும்..

வளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்கா உறுதி!

வளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்க, அமெரிக்கா உறுதியளித்துள்ளது. வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன. வளரும் நாடுகளுக்கு அமெரிக்க ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது எனும் முடிவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய மாநிலம்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன.  இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை அடையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் விக்டோரிய மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸ். இதுவரை விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக ...

மேலும்..

மலேசியாவில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்…

மலேசியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் மரணித்தமை தொடர்பில் அந்த நாட்டு காவல்துறை பிரதானிக்கும், உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலை நாளைய தினம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை – ...

மேலும்..

சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் நடத்திய இரத்ததான முகாம்.

சவுதி அரேபியாவில் செப்டம்பர் 23 ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய தினம் கொண்டாடப்படும்.  ஓட்ட பந்தயம், வாண வேடிக்கை, விமான சாகசங்கள், கார் மற்றும் பைக் பந்தயங்கள், கால்பந்து போட்டி என வாரம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கடுகு ...

மேலும்..

கூட்டத்தொடர் ஆரம்ப நாளிலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் கருத்து!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று  ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் இலங்கை குறித்து முதல் நாளிலேயே கடும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது இலங்கையில் கடந்த மாதம் 30ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் அதனை அடுத்து இடம்பெறும் இராணுவத் ...

மேலும்..

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக இத்தாலியில் இன்று ஆர்ப்பாட்டம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் பிரதமர் மஹிந்த பங்கேற்கின்ற நிகழ்வு இடம்பெறவுள்ள இத்தாலியின் பொலஞ்ஜா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நாளை மாலை 03 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கின்ற ...

மேலும்..

திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள்.

திரைப்படம் போன்று செய்தி வெளியிடுகின்ற இந்திய ஊடகங்கள். அதனை பிரதி பண்ணும் எம்மவர்கள். ஆப்கான் விவகாரம் இதற்கு சான்று.     இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள், அன்பானவர்கள். இவ்வாறான மக்களை யூடியூப் சனல் மூலம் பணம் சம்பாதிக்கின்ற சில கும்பல்கள் ஊடகம் என்று ...

மேலும்..

கொரோனா காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அகதிகளும்…

கொரோனா பெருந்தொற்று சூழலினால் தொழில்நுட்பம் சார்ந்து இயங்க வேண்டிய நிலை அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் அதற்கான திறன்களும் ஆஸ்திரேலியாவில் குடியமரக்கூடிய அகதிகளுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. சமீபத்தில் Foundations for Belonging 2021 என்ற தலைப்பின் கீழ் Settlement Services International மற்றும் ...

மேலும்..

யாழ்குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு கோரிக்கை?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு வடக்கு,கிழக்கை சேர்ந்த 4 ஆயர்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-09-08திகதி கடிதம் மூலம் நான்கு ஆயர்களும் ஒப.பமிட்டு கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். யாழில் முன்னர் சுவிஸ் நாட்டு நிறுவனத்துடன் தூதரகப் பணிகளும் கவனிக்கப்பட்ட ...

மேலும்..