January 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கில் நேற்று மட்டும் 55 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் நேற்று 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு நேற்று ...

மேலும்..

அமைச்சர் வாசு விரைவில் சுகம்பெற வேண்டும்; மேயர் றகீப் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விரைவில் பூரண சுகம்பெற பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞன் மரணம்

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்றிரவு (11) 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன்  ...

மேலும்..

யாழ். பல்கலையில் அனுமதி பெறப்படாத தூபியை இடித்தழித்தமை தவறு இல்லை! -ஜீ.எல். பீரிஸ்

யாழ். பல்கலைக்கழகத்தில் போர் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது. அதனாலேயே அந்தத் தூபி இடித்தழிக்கப்பட்டது." - இவ்வாறு கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் ...

மேலும்..

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – சாணக்கியன்

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு - கிழக்கில் இன்று(திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து தமிழ் ...

மேலும்..

தனது தாயாரை கத்தி ஒன்றினால் கடுமையாக தாக்கிய ஆசிரியை.. வீடியோ சமூக வலைகளில் வைரலானதை அடுத்து கைது!

தனது தாயாரை கத்தி ஒன்றினால் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பட்டதாரி ஆசிரியை ஒருவரை கம்பளைப் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியயை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் லலித் வீரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நபரை நீதிவான் ...

மேலும்..

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு!

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்படுள்ளதாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். உணவுகள் பார்சல் மூலம் வழங்கப்படுவதாகவும் அதனை கதிரை ஒன்றில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் ...

மேலும்..

மன்னாரில் கொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பம்!

மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடாத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ...

மேலும்..

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பம்-சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையை அடுத்து, ...

மேலும்..

கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை,இதுவரை1,647 ஆக அதிகரிப்பு-மாகாண பணிப்பாளர் அழகையா லதாகரன்

(பதுர்தீன் சியானா) கிழக்கு மாகாணத்தில்  60 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,கூடுதலாக கல்முனை தெற்கில் 15 பேரும் காரைதீவில் 13 பேரும் கிண்ணியாவில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் என  கிழக்கு மாகாண பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். அத்துடன், கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, இன்று  ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் 115 ஊழியர்களுக்கு பரிசோதனை; எவருக்கும் கொரோனா இல்லை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். மாநகர முதல்வர் சிரேஷ்ட ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி நிதி மற்றும் நிருவாகப் பிரிவுகள் உடனடியாக மூடல் !

அம்பாறை - காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள நிதி மற்றும் நிருவாகப் பிரிவுகள் இன்று (11) உடனடியாக மூடப்பட்டன. பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு இரு வாரங்களுக்கு முன் தொற்று உறுதி ...

மேலும்..

சாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் அறிவித்தல்!

தற்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக சாரதி உரிமத்தை புதுப்பிப்பதற்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு கூடிய விரைவில் வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இதுபோன்ற நீட்டிப்பு வழங்கப்படுவது இதுவே கடைசி முறை என்று ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (11) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு விவகாரம்- மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடித்து அகற்றியமையைக் கண்டித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள ...

மேலும்..

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் பஜீகா விலக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிரி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு!

(அஸ்லம் எஸ்.மௌலானா) ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி ...

மேலும்..

ஓட்டமாவடியில் 90 அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர்!

  (ந.குகதர்சன்) ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (11)திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொன்னூறு (90) அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ...

மேலும்..

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ?நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை!

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா ? அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார். உதயநிலா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதயநிலா பிரீமியர் லீக் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் ...

மேலும்..

வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவருடன் டிப்பர் வாகனம் மோதியதில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

 (எப்.முபாரக்  ) தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவருடன் டிப்பர் வாகனம் மோதியதில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்பலாகாமம் 96 ஆம்  கட்டைப்பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முள்ளிப்பொத்தானை 94 ...

மேலும்..

பிள்ளையானுக்கு எதிரான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது -சட்டமா அதிபர் திணைக்களம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற சபை அமர்வின் போதே இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்..

விபத்துக்குள்ளான இந்தோனேசியா ஸ்ரீ விஜய விமான கருப்பு பெட்டி (Black box )கிடைத்தது

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இந்தோனேசிய ஜெட் விமானத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை  கண்டறிந்தனர். "கருப்பு பெட்டிகளின் இரண்டையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், இரண்டு Black box-உம் ...

மேலும்..

சாய்ந்தமருதைச் சேர்ந்த சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு!

( நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்  கடந்த 2021.01.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியானது. இவர் பாதுகாப்பு அமைச்சில் 05 வருடங்கள் கடமையாற்றியதுடன் ...

மேலும்..

கிளிநொச்சியில் தொடரும் மழை ;குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு !

கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் வான் பாய்கிறதுடன், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி வாசிப்பின் பிரகாரம் கிளிநொச்சி நீர்பாசன குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரணைமடு குளம் ...

மேலும்..

மலையக பகுதிகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(க.கிஷாந்தன்) நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் அசாதாரண சூழ்நிலையில் 2021ம் ஆண்டின் முதல் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் இன்று (11)ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக சுகாதார பழக்கவலக்கங்களை பின்பற்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி வலய அதிகாரிகளுக்கு பணிப்புரை ...

மேலும்..

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதி

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ரவூப் ஹக்கீமுடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ...

மேலும்..

ஹர்த்தாலுக்கு யாழில் மக்கள் பூரண ஆதரவு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் ...

மேலும்..