May 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தில் உள்ள கருமையை போக்கும் வழிகள்…!!

முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளைகள் ஆகியவை மறைய முகம் பொலிவாக இருக்க தினமும் முகத்திற்கு பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள் ஒரு பவுலில் பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து ...

மேலும்..

கொரோனா மேலும் 1,165 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (20) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,532 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 151,343 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு -மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்

யாழில் கொரோனாதொற்று  வீதம் அதிகரிப்பு பொதுமக்கள் அலட்சியமாக  செயல்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.யாழ் ...

மேலும்..

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேறியது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில்  89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148  வாக்குகளும் எதிராக 59  வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சட்டமூலம் தொடர்பான வாதவிவாதங்கள் ...

மேலும்..

தேசிய கண் வைத்தியசாலையின் விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று  பரவல் காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகைத் தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு, அருகில் உள்ள அரச வைத்தியசாலையின் கண் நோய் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, தொடர் சிகிச்சைப் பெறும் ...

மேலும்..

கல்முனையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு தீவைப்பு!

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இன்று அதிகாலையும் இனம் தெரியாதோரால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றிருக்க கூடும் என்று பிரதேச ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தீ : தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது தீ !!

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை பிரதேச செயலக நிதிப்பிரிவில் இன்று பகல் திடீரென தீப்பற்றி கொண்டதனால் ஆவணங்கள் பலதும் தீக்கிரையானது. பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம்.பாரிஸ் பதில் கடமைக்காக வேறு இடத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த நிலையிலையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. ...

மேலும்..

கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும்..

காரைதீவை சேர்ந்த முன்னாள் அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை காலமானார்!

(காரைதீவு சகா) காரைதீவைச்சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை நேற்று(19) தனது 81ஆவது வயதில் காலமானார். இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் பிரதி அதிபராக 3 தசாப்தகாலத்திற்கும் மேலாக அர்ப்பணிப்பான சேவையாற்றியவராவார். காரைதீவு ஓய்வூதியர் சங்கத்தலைவராக கண்ணகை அம்மனாலய நிருவாகசபை உறுப்பினராக விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற செயற்குழு உறுப்பினராக ப.நோ.கூ.இயக்குனர்சபை ...

மேலும்..

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்!

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய ஜுராங் ரோவர் விண்கலத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை சீனா வௌியிட்டுள்ளது. சீனாவின் தேசிய விண்வெளி மையம், தனது வலைத்தளத்தில் இந்த நிழற்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த நிழற்படங்கள் கிரகத்தின் நில அமைப்பை காட்டுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை ...

மேலும்..

துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள்சக்தி ஆர்ப்பாட்டம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சட்டமூலம் குறித்த விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும்..

லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி; லேப்டாப் பரிசளித்த எம்.எல்.ஏ!

விழுப்புரம் அருகே உள்ள அளிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதனேசன் - தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுடைய 10 வயது மகள் சிந்துஜா. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இச்சிறுமி, அதன் ...

மேலும்..

மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ இந்தியாவில் காலமானார்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் கடந்த மூன்று வருடங்களாக மன்னாரில் இருந்து பாத யாத்திரை , மற்றும் உண்ணா நோன்பை மேற்கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ...

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்றால் 64வயது பெண் மரணம்

வவுனியாவில் கொரோனா தொற்றால் 68 வயது பெண் ஒருவர் இன்று (20) மரணமடைந்துள்ளார். வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பி சீஆர் பரிசோதனையில் அவருக்கு ...

மேலும்..

வவுனியா மாவட்டத்திற்கு 27 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவை!

வவுனியா மாவட்டத்திற்கு 27 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவையாக உள்ளது. அதனை விரைவாக உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் முயற்சியாளர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களங்களை தொடர்புகொள்ளுமாறு வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.விஸ்ணுதாசன் தெரிவித்தார். இது தொடர்பாக ...

மேலும்..

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் ;இந்தியாவில் சம்பவம்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களை போலீஸார் தோப்புக்கரணம் போட வைத்தது வைரலாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வாரம் முதலாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அவசர தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே ...

மேலும்..

காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் – இஸ்ரேல் அறிவிப்பு

பலஸ்தீன – காசா பிரதேசத்தின் மீதான போர் நிறுத்தம் இதுவரை அமுலுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். காசாவில் எப்போதும் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்ற காலப்பகுதியை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 493 பேர் நேற்று கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், நேற்று 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ...

மேலும்..

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசேட அறிவுறுத்தல்

55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு COVID – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று! தனியார் வைத்திசாலையில் அனுமதி ..

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த குடும்ப அங்கத்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்..

மாளிகைக்காட்டில் மீனவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை;பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ்!

(சகா) காரைதீவு பிரதேசத்துக்குட்பட்ட  மாளிகைக்காடு மீன் சந்தையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மீன் வியாபாரிகளுக்கு இன்று (19) கொவிட் - 19 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க, காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தமது வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவத்தனர். சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி : உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இளங்கலைமாணி மொழிபெயர்ப்புக் கற்கைநெறி (சிறப்பு) (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பல்கலைக்கழக அனுமதி 2020/2021 உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test) இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்குரிய உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம் இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு (நான்கு வருடம்) அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து ...

மேலும்..

தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது-சாணக்கியன்

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவகாரத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக ...

மேலும்..

பொது மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்…

இலங்கையில் 55 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 55 வயதுக்குட்பட்ட குறித்த நபர்களுக்கு, ...

மேலும்..

இலங்கையில் 14 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கல்…

நாட்டில் நேற்று (19) மாத்திரம் 16,845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது மருந்து போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 474,685 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது…

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,906 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சரியான முறையில் ...

மேலும்..

கொரோனா மரணங்கள் நேற்றைய தினம்36 உறுதி செய்யப்பட்டன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். ஹொரணை (இருவர்), எம்பிலிபிட்டிய, நாவலப்பிட்டி, புசல்லாவை, மாத்தளை (இருவர்) வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊரபொல, கட்டுவ, செவனகல, ...

மேலும்..

சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆலோசிக்க வர்த்தகர்களை சந்தித்த அரச அதிகாரிகள்…

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகமும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண்கள் சந்தையில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கான சுகாதார நடைமுறை தொடர்பான கலந்துரையாடலும் விழிப்புணர்வு நடவடிக்கையும் இன்று (19) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் ...

மேலும்..

நீரிணைப்புக்காக மாநகர சபை வீதிகளை சேதப்படுத்தல், செப்பனிடல் தொடர்பிலான அறிவித்தல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) குழாய் நீர் இணைப்புக்காக குழி தோண்டி சேதப்படுத்தப்படும் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான வீதிகளை, இணைப்புப் பெறுகின்ற நபரே மீளச்செப்பனிட வேண்டும் எனவும் அதற்கான மதிப்பீட்டுத் தொகையை அவர் மீளப்பெறும் பணமாக, மாநகர சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இது ...

மேலும்..

நீர் வழங்கல் சபையின் சாய்ந்தமருது காரியாலய ஊழியர்கள் எல்லோருக்கும் அண்டிஜன் நெகட்டிவ்…

நூருள் ஹுதா உமர். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேருக்கும் எடுக்கப்பட்ட அண்டிஜென் பரிசோதனையில் பெறுபேறுகள் சகலருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ...

மேலும்..

கோவிட்-19 தொற்றாளர்கள் துண்பங்களுக்கு உள்ளாக்கப்படுவது கவலையானது…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுகின்றவர்கள் பல்வேறு வடிவங்களில் துண்பப் படுவதோடு அநீதிகளுக்கும் உள்ளாக்கப் படுவது கவலையளிப்பதாக கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.  மஹ்தி தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று(20) ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் கிராமம் முடக்கம்…

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார். வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமம் தனிமைப்படுத்தப்படுதல் தொடர்பில் ...

மேலும்..