பிரதான செய்திகள்

மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்!

மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்! - தண்டிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரி நிலையம் வலியுறுத்து  மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்   ...

மேலும்..

வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு! (photos)

ஜனநாயக பங்கேற்றல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் விசேட செயலமர்வு இன்று 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விசேட ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்!

நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்! - ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா தெரிவிப்பு (photos) அனர்த்தம் ஏற்படும்போது அதனை மேலும் பாதுகாப்பான நெகிழ்திறன் கொண்ட நாட்டைக்  கட்டியெழுப்புவதற்கான சந்தா்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் யாழில் ஜனாதிபதி இன்று முக்கிய சந்திப்பு!

திடீர்ப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று  பிற்பகல் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ...

மேலும்..

வடக்கு அமைச்சர்கள் ஊழல், மோசடி விவகாரம்: 14ஆம் திகதிப் பின்பே தமிழரசுக் கட்சியின் முடிவு அறிவிப்பு 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

ஜுலை 13இல் பங்களாதேஷ் பறக்கின்றார் மைத்திரி!

பங்களாதேஷ் பிரதமர் ஷிக் ஹஸினாவின் அழைப்பையேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனவும், அந்த மாதம் 16ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ...

மேலும்..

பொதுநலவாய செயலருக்கு இலங்கை வருமாறு ரணில் அழைப்பு! (photo)

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பற்றிசியா ஸ்கொட்லேன்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுநலவாய செயலருக்கும், பிரதமர் ரணிலுக்குமிடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றது. இலங்கைக்கும் பொதுநலவாய அமைப்புக்குமிடையே இருக்கின்ற உறவுகள் பற்றி இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போதே ...

மேலும்..

செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.

"எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.''  - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...

மேலும்..

ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்.

"நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதித்திருக்கவேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் ...

மேலும்..

வடக்கை வதைக்கிறது வறட்சி! – அவசர நடவடிக்கைகளுக்கு சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து.

"வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும்''  என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை  அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியால் நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட ...

மேலும்..

விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரை பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் வடக்கு அமைச்சர் குருகுலராஜா!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரையில்  தனது பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா  இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்  அமைச்சர் த.குருகுலராஜா கையெழுத்திடவில்லை ...

மேலும்..

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேசியே முடிவு! – தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு  

"வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள்  குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.'' -  இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

முச்சக்கரவண்டியில் திருட முயன்ற திருடன் -பொதுமக்களால் நையப்புடைப்பு.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளில் அண்மைக்காலமாக திருடி வந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நையப்புடைத்தனர். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இன்று (9) காலை திருடிய வேளை முச்சக்கர வண்டி உரிமையாளரால் கையும் களவுமாக இளைஞர் ஒருவர் பிடிபட்டார். குறித்த ...

மேலும்..

​வவுனியாவில் சுதந்திர பூங்கா திறந்து வைப்பு

வவுனியா ஏ9 வீதி இரட்டைபெரிகுளத்தில் இன்று சுதந்திர பூங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக்க, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, ...

மேலும்..

பசுவதையை நிறுத்துவோம்; அதற்கு முன் மனித வதையை நிறுத்துவோம். – அமைச்சர் மனோ கணேசன்

  இலங்கையில் பசுவதையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்வோம். இங்கே உரையாற்றிய பிரம்ம குமாரிகள் அமைப்பை சார்ந்த கலாநிதி மலர்செல்வி மகேசன் அம்மையார், அனைத்து மிருக வதைகளையும் நிறுத்துவோம் என்று கூறினார். இது மிகவும் நல்லது. மனிதனும் ஒரு மிருகம்தான். ...

மேலும்..