பிரித்தானியச் செய்திகள்

பிரித்தானியாவின் தீர்மானத்தை நியாயப்படுத்த அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மட்டும் போதாது: நீதியமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரித்தானியாவின் தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மட்டும் போதாது என பிரித்தானிய நீதியமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யை நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவுடன் இருதரப்பு வர்த்தக ...

மேலும்..

லண்டன் கேம்டன் லொக் சந்தைப் பகுதியில் பாரிய தீ

வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் லொக் சந்தைப் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் குறித்த சந்தைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 70இற்கும் மேற்பட்ட ...

மேலும்..

உக்ரைனிற்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியா உக்ரைனிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் சீர்திருத்தங்களை வலுப்படுத்தல் மற்றும் நாட்டிற்கான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக உக்ரைன் பிரதமர் வோலோடிமைர் கிரோஸ்மான் (VOLODYMYR GROYSMAN) மற்றும் பொரிஸ் ஜோன்சன் ...

மேலும்..

ஜி-20 மாநாட்டில் ட்ரம்பிற்கு சவால்விடுக்கவுள்ள மே

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமர் தெரேசா மே, காலநிலை மாற்ற உடன்படிக்கை தொடர்பில் ட்ரம்பிற்கு சவாலை ஏற்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்போது காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது என அவர் ...

மேலும்..

சவுதியின் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்த விசாரணைகளை மறைக்கும் மே

பிரித்தானியாவில் செயற்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு சவுதி அரேபியா நிதியுதவி செய்தமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகளை வெளியிட பிரதமர் தெரேசா மே மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்ற அச்சத்தில் இவ்வாறு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதில் ...

மேலும்..

பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் ரகசிய விஜயம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் எதிர்வரும் வாரம் பிரித்தானியாவுக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் சில நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட செய்திகளிலேயே இந்த ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!

பிரித்தானிய முஸ்லிம் சமூகத்தினருடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீர்படுத்தும் வகையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த மூலோபாய கொள்கைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் பொது வழக்கறிஞர் டொமினிக் கிறீவ்வினால் (Dominic Grieve) நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட ...

மேலும்..

கட்விக் விமானநிலையத்திற்கு மேலாக பறந்த ஆளில்லா விமானத்தால் பதற்றம்

பிரித்தானியாவின் கட்விக் விமானநிலையத்திற்கு மேலாக ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததைத் தொடர்ந்து, விமான ஓடுபாதை மூடப்பட்டதாகவும் ஐந்து விமானங்கள் திசை திருப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமான ஓடுபாதை முதலில் ஒன்பது நிமிடங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் ...

மேலும்..

பிரதமர் தெரேசா மே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மத்திய லண்டனில் உள்ள சர்வதேச ஊடகமான பி.பி.சியின் தலைமையகத்தின் ...

மேலும்..

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி வடக்கு அயர்லாந்தில் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன நடத்தப்பட்டுள்ளன. நேற்று (சனிக்கிழமை) பெல்பாஸ்ட்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ள போதும், குறித்த ...

மேலும்..

மறைந்த இளவரசி டயானாவின் கல்லறையில் அஞ்சலி

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர், அவர்களது தாயும் மறைந்த பிரித்தானிய இளவரசியுமான டயானாவின் கல்லறையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இளவரசி டயானா உயிரோடு இருந்திருந்தால் நேற்றுடன் (சனிக்கிழமை) அவருக்கு 56ஆவது வயது பூர்த்தியாகியிருக்கும். அவரது பிறந்த நாளன்று அஞ்சலி செலுத்தும் ...

மேலும்..

கிரென்பெல் அனர்த்தம்: விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

தீ விபத்திற்கு உள்ளான கிரென்பெல் குடியிருப்பு கட்டடம் தொடர்பான பொது விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சேர் மார்ட்டின் மூர்-பிக் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு லண்டனிலுள்ள கிரென்பெல் குடியிருப்பு கட்டடத்தில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் திகதி ஏற்பட்ட தீ ...

மேலும்..

அரசியல் ஒருங்கிணைப்பு அவசியம்: பிரித்தானிய நிதியமைச்சர்

சிறந்த அரசியல் ஒருங்கிணைப்பின்மை, பிரெக்சிற்றை பாதிக்கும் என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடத்தப்பட்ட பொருளாதார உச்சமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “பிரெக்சிற் தொடர்பில் ...

மேலும்..

இரண்டாவது கருத்துக்கணிப்பு எண்ணத்தை நிக்கோலா கைவிட வேண்டும்: தெரேசா மே

ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனும் எண்ணத்தை முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் கைவிட வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இங்கிலாந்து பாடசாலை ஒன்றிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துர் தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

ஒன்றிய பிரஜைகள் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும்

பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஒன்றியப் பிரஜைகளின் நிலை தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து ...

மேலும்..