இலங்கை செய்திகள்

முக்கிய கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மஹிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை ...

மேலும்..

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள ...

மேலும்..

ஊரடங்குவேளையில் கொட்டகலையில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை!

(க.கிஷாந்தன்)   திம்புள்ள  - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.   நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு ...

மேலும்..

நாடாளுமன்றம் இல்லாத சர்வாதிகாரம் – சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தொடர்ந்தும் முடிவெடுத்தால் இலங்கை சர்வாதிகாரம் கொண்ட நாடாக பார்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு ...

மேலும்..

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது – சுமந்திரன்!

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ...

மேலும்..

மகிந்தவின் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் ...

மேலும்..

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்து நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) 128 வருடங்கள் ஆகின்றன. 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார். சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத ...

மேலும்..

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது!

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேச மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில் 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு 2 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் ...

மேலும்..

நேற்று பதிவான 13 பேரில் 11 பேர் கடற்படையினர்!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலினை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்!

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் UL 504 என்ற விமானத்தில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...

மேலும்..

பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இன்று(திங்கட்கிழமை) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தே பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..