இலங்கை செய்திகள்

களுத்துறையில் வெள்ளியன்று நீர் வெட்டு.

களுத்துறை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை ...

மேலும்..

இந்தாண்டு விவசாயிகளுக்கு சிறந்த யூரியா உரம் வழங்கப்பட்டது -மஹிந்த அமரவீர

கடந்தாண்டு சிறு போகத்தில் நெற் செய்கைக்கு அரசாங்கம் வழங்கிய யூரியா உரம் 15 வருடங்களு பின்னர் சிறந்த முறையில் வழங்கப்பட்டதாக விவசாயிகள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். பெரும் போகத்திற்கு உரங்களை அரசாங்கம் வழங்குவது தொடர்பில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய பிரதிநிதிகள் ...

மேலும்..

வேலைநிறுத்தம் செய்வதற்கு முன் என்னுடன் கலந்துரையாடுங்கள் – பந்துல குணவர்தன

எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்புக்கும் முன்னதாக தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். பணிப்புறக்கணிப்புக்கு முன்னர் கலந்துரையாடலில் ஈடுபடுவதே பொருத்தமானது எனவும், பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையின் அங்கீகாரமும் ஒரு கட்டத்தில் பெறப்பட ...

மேலும்..

அம்பாறையில் வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் சம்பந்தமான செயலமர்வு

Helvetas நிறுவனமும் GAFSO நிறுவனமும் இனணந்து நடத்திய வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்த்தல் சம்பந்தமான செயலமர்வு கடந்த வியாழக்கிழமை(13) அம்பாறை கோப்-இன் ஹொட்டலில் இடம்பெற்றது.வளவாளராக பிரகீத் கலந்து கொண்டதுடன் கெப்சோ நிறுவனம் சார்பாக அதன் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே. ...

மேலும்..

புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஜனநாயக போராளிகள் இந்திய அரசிடம் வலியுறுத்தல் .

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு ...

மேலும்..

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் – நீதியமைச்சர்

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சட்டக்கல்லூரியில் எந்த மொழியில் கற்கைகள் நடத்தப்படும் என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வை தாய்மொழியில் நடத்தலாம் என சட்டக் கல்வி ஆணைக்குழு ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இவர்களை விடுதலை செய்தமைக்காக தாம் ...

மேலும்..

யாழ். மந்திரிமனையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மரபுரிமை மையமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இதன் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் கட்டடத்தில் வளர்ந்து காணப்படும் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென மற்றுமொரு அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய இருவர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே குறித்த அழைப்பாணையை விடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

மரணித்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு – மட்டக்களப்பில் நடந்த அதிசயம் !

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதி கிரிகை நடந்த மயானத்திற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று (18) அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ...

மேலும்..

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம் – ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்!

வல்வெட்டித்துறையில் முதியவர் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாள் வெட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் ...

மேலும்..

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவிப்பு

குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன ...

மேலும்..

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த செல்லப்பிராணி

வீதியிலிருந்த தங்க நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை செல்லப்பிராணியான நாயொன்று மீட்டுக் கொடுத்த சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி, கண்டி குலகம்மான, மகாதென்ன பகுதியில் வீதியில் தவறவிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணப்பை ...

மேலும்..

காலியில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உட்பட மூவருக்குக் காயம்

காலி, யக்கலமுல்ல, மாகெதர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்..

யாழுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு இந்திய நிறுவனங்களே காரணம்!

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி நிறுத்தப்படுமா? இல்லை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர சபையில் இன்று கேள்வி எழுப்பினார். யாழ் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி, செய்யப்பட்டது. தற்போது ...

மேலும்..