November 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி ;தொடர்பை பேணியவர்கள் தகவல் வழங்க இழுத்தடிப்பு

அட்டன், தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று (06) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.   தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ...

மேலும்..

கொவிட் – 19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலை.

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட் - 19 சிகிச்சை நிலையமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.  குறித்த பிரிவு ...

மேலும்..

மட்டக்களப்பில் சற்று முன்னர் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 60ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் இருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இன்று (2020.11.07) அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளதாக ...

மேலும்..

வவுனியா வடக்கு கல்வி நிலைய மோசடி: வடக்கு அதிகாரிகள் 12 பேருக்கு சிக்கல்!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலயத்தில் உள்ளனர். வவுனியா வடக்கு கல்வி ...

மேலும்..

சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 110 வேலைத்திட்டங்கள்

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய வாரி செளபாக்யா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் முதல்கட்டத்தில் 110 வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவை  வெகுவிரைவில்    நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் (06)நடைபெற்ற வாரி செளபாக்கியா கூட்டத்தின்போதே ...

மேலும்..

போக்குவரத்து விதி மீறல் (Spot Fine) தண்டப்பணத்தை செலுத்த கால அவகாசம்

கொரோனா வைரஸ் நிலைமைக்கு மத்தியில் மோட்டார் வாகன போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை (Sopt Fine) செலுத்த முடியாது சிரமங்களுக்கு உள்ளாகும் பொது மக்களுக்காக நிவாரணக் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இது வரையில் நிலவும் ...

மேலும்..

யாழ். கச்சேரிக் கூட்டத்தில் பங்கேற்ற கோப்பாய் பிரதேச செயலர், தவிசாளரை உடனடியாகத் தனிமைப்படுத்தப் பணிப்பு – ஏனையவர்களின் நிலைமை தெரியவரவில்லை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி - சுகாதார நடைமுறைகளைப் புறந்தள்ளி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோப்பாய் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிப்புரை வழங்கியுள்ளமை தொடர்பில் சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் ...

மேலும்..

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரியில்…

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை அடுத்த  ஆண்டு(2021) ஜனவரியில்  நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய2021ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 28ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்..

இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முற்றாக முடக்குங்கள் – தேசிய விடுதலை மக்கள் முண்ணனி வேண்டுகோள்…

"இலங்கையில் அதி தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு பூராகவும் சுமார் இரண்டு வாரங்களுக்காவது முடக்கல் நிலையை ஏற்படுத்தி தொற்றாளர்களை அடையாளம் காண அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புடையவர்களும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்." - இவ்வாறு தேசிய விடுதலை ...

மேலும்..

16 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நடப்பது என்ன?

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 67 க்கும் மேற்பட்ட  வீடுகள் எந்தவித காரணங்களுமின்றி பல வருடங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதாகவும்  இவற்றுக்கான பயனாளிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் அரசாங்க அதிபரினால் ...

மேலும்..

சற்று முன்னர் மட்டக்களப்பில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

 மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கோறளைப்பற்று மத்தியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய நிலமையின்படி மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54 ...

மேலும்..

அவசரசெய்தியாளர்கள் சந்திப்பு…

அவசர செய்தியாளர்கள் சந்திப்பு. நாளை 07-11-2020 சனிக்கிழமை  காலை 11.00 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். இச்சந்திப்பு சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்  நடைபெற உள்ளது. எனவே தங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையின் சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அனுப்பி வைத்து ...

மேலும்..

மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விதைப் பக்கெட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு…

பாறுக் ஷிஹான் மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விதைப் பக்கெட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி சங்கங்களை கணனிமயப்படுத்தும் செயற்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு எமது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும்,சமுர்த்தி மகா ...

மேலும்..

தலவாக்கலை,மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை, மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 32 வயதுடைய பெண்ணொருவருக்கெ இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கொழும்பு, வத்தளை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி ...

மேலும்..

நெய்வேலி காவல் நிலையத்தில், செல்வமுருகன் அடித்துக் கொலை; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைகோ அறிக்கை…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் செல்வமுருகன், முந்திரி வணிகம் செய்து வருகின்றார். அக்டோபர் 28 அன்று காலையில், வடலூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பிரேமா, அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை. எனவே பிரேமா, வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோராள தெரிவிப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு  10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோராள தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06)   இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை ...

மேலும்..

கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட இம்முறை வீடுகளிலிருந்தே தீபாவளியைக் கொண்டாடுங்கள் – மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்…

"இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ்வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ...

மேலும்..

அட்டன் பகுதியில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு தேவையான உலர், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகம்…

(க.கிஷாந்தன்) கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் பகுதியில் சுயதனிமைக்கு  உட்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு தேவையான உலர், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று (06.11.2020) விநியோகிக்கப்பட்டன. 10 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த நிவாரணப் பொதிகள்,  அட்டன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கிராம ...

மேலும்..

தலவாக்கலையில் காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைப்பு – கட்டடத்திற்கு சீல் வைப்பு

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள,  பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்  கட்டடமொன்று  இன்று (06.11.2020)  'சீல்' வைக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் ...

மேலும்..

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் நவம்பர்27முதல் டிசெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும் என்றும், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மாத்திரமே நடைபெறுமென இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழல்கள் காரணமாக ஆரம்பத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...

மேலும்..

கண்டி தலாத்து ஓயா மூடக்கம்?

கண்டி தலாத்து ஓயா நகரம் நாளை முதல் முடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நகரிலுள்ள அத்தனை கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தலாத்துஓயா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் வெதகே தெரிவித்தார்.

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 10.6 மில்லியன் ரூபாய் நிதி- மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு  10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06)  பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

ஐ.பி.எல்- மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று(05 )டுபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிகாணும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெப்பிட்டல் அணியும் போட்டியை ...

மேலும்..

முறையாக வாக்கு எண்ணிக்கை பதிவானால் வெற்றி பெறுவேன் – ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்இ ஜனநாயக ...

மேலும்..

வார இறுதியில் கூடுதலான பொலிஸ் வீதி தடைகள்……

வார இறுதியில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ் வீதி தடைகள் இடம்பெறும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். வார இறுதி என்பதினால் பொது மக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்தி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வார இறுதியில் பயணங்களைக் ...

மேலும்..

‘கொழும்பிலிருந்து கதிர்காமம்சென்ற 120 பேர் சிக்கினர்’ – தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த 120 பேரை , கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், 06-11-2020 இன்று தொடக்கம் தொடர்ந்து வரும் 14 தினங்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த மேற்படி 120 பேரும், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்சமன் திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஊரடங்குச் ...

மேலும்..

200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பத்திரிகைகளை ஏற்றி வந்த சிறிய ரகத்திலான லொறியொன்று (இன்று) 06-11-2020ல் அதிகாலை 4 மணியளவில் பெரகலைப் பகுதியில் பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   இவ் விபத்தில், குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி சாரதி, கடுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை ...

மேலும்..

பிரதமரின் தலைமையில் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு

அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (06) தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் கௌரவ அமைச்சர் ...

மேலும்..

மட்டக்களப்பு முதலைக்குடா மகிழடித்தீவு பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்புத் திட்டம் அமுல்படுத்த 381 ஏக்கர் அரச காணி இனங்காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் முதலைக்குடா மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற 381 ஏக்கர் அரச காணி இனங்காணப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்டுள்ள இவ்வரச காணியினை பார்வையிடும் களவிஜயம் ஒன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய க. ...

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நஞ்சருந்தியதில் யுவதி ஒருவர் மரணம்;

திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில்   16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேரையும் இன்று (06) 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ...

மேலும்..

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகரின் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன்(வயது-55) என்பருடைய கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் ...

மேலும்..

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அக்கரைப்பற்று பிரதேச சபையால் தீர்மானங்கள் நிறைவேற்றம்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த  பிரதேச சபையால்  மேற்கொள்ளப்பட்ட விழிப்பூட்டும் கருத்தரங்கும், தீர்மானங்களும் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் பறூசா மற்றும் சுகாதார பரிசோதகர் ...

மேலும்..

வாகனங்கள் சோதனை நடவடிக்கை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலில் உள்ளதன் காரணமாக பிரதான வீதியின் ஊடாக பயணம் செய்யும் வாகனங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இன்று (06)வெள்ளிக்கிழமை சோதனை செய்து வருகின்றனர். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பிரதான வீதியின் ஊடாக ...

மேலும்..

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி வவுனியாவில் விசேட பிரார்த்தனை

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில்  வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா – 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய கொரியா கருவி அவசரப் பரிசோதனை திட்டம்

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று ...

மேலும்..

புத்தளத்தில் சடலமொன்று மீட்பு…

புத்தளம்  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் நேற்று(05) மாலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   உயிரிழந்த குறித்த நபர், கெட்டிப்பொலவில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ் கெட்டிப்பொல சுகாதார ...

மேலும்..

கல்முனை மாநகர சபை பட்ஜெட் மக்கள் பார்வைக்கு

கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அறிக்கை பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார். கல்முனை பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை (02) ...

மேலும்..

இந்தியா -இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட் நாளை விண்ணில்

இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி ...

மேலும்..

க.பொ.த உயர்தர பரீட்சை இன்றுடன் நிறைவு

வடைகிறது. கொரோனா அபாயத்தின் மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்தார். நாடு முழுவதும் 2,648 மையங்களில் 362,824 பேர் பரீட்சைக்கு தோற்றினர். பரீட்சையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவிய அனைவருக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நன்றி தெரிவித்தார். ஒக்டோபர் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இயந்தித்தில் சிக்கி மரணம்

பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில், ஐ திட்டத்தின் கீழ் கொடிகாமம்- புலோலி வீதி அகலப்படுத்தப்பட்டு காபெட் இடப்பட்டு வருகிறது. மாகா நிறுவனம் இந்த வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டு ...

மேலும்..

இலங்கையில் COVID 19 -நோயாளிகள் எண்ணிக்கை 12570,குணமடைந்தோர் 6623

இலங்கையில்  COVID 19 வைரசு தொற்றுக்குள்ளானோரின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 12570 ஆக அதிகரித்துள்ளது.   COVID-19 பரம்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது 2020-11-06 08:43:19 12570 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 5918 சிகிச்சை பெறும் நோயாளிகள் 0 புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் 6623 குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 29 இறப்பு எண்ணிக்கை இதேவேளை ,மினுவங்கொட மற்றும் திவுப்பிட்டிய கொவிட் கொத்தில் இதுவரை பதிவாகியுள்ள ...

மேலும்..

கொரோனா தொடர்பாக ரணில் கருத்து !

கொரோனா பரவல் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் முடிவுக்கு வரும் எனவும் ஆனால் அதன்பிறகு கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அது கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மீன்பிடி ...

மேலும்..

நாட்டை இரு வாரங்களுக்கு முற்றாக முடக்குங்கள்,தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் தெரிவிப்பு.

இலங்கையில் அதி தீவிரமாக பரவி வரும் covid19 கட்டுப்படுத்த நாடு பூராகவும் சுமார் இரண்டு வாரங்களுக்காவது முடக்கி தொற்றாளர்களைஅடையாளய் காண அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புடையவர்கள்  அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவர் முஸம்மில் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்- வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள இறக்காமம்  பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன்   குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இறக்காமம் பகுதியில் இருந்து தொழில் நிமிர்த்தம் ...

மேலும்..