November 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெளிநாடுகளில்சிக்கியுள்ள உறவுகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன்கோரிக்கை…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ...

மேலும்..

190 புள்ளிகளை பெற்று கிண்ணியா வலயத்தில் முதலிடம் பெற்ற டாக்டர் முஹம்மட் நசீரின் புதல்வன் அம்மார் செயின்,எதிர்காலத்தில் விஞ்ஞானியாவதே இலக்கு…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மொஹமட் நசீர் அம்மார் செயின் எனும் மாணவன்  190 புள்ளிகளை பெற்று கிண்ணியா வலயத்தில் முதலாம் ...

மேலும்..

மாவீரர்களை நினைவுகூர தமிழருக்கு உரித்து உண்டு – அதைத் தடுத்து நிறுத்த இராணுவத் தளபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று சம்பந்தன் பதிலடி…

"தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை - தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்துநிறுத்த இராணுவத் தளபதிக்கோ அல்லது வேறு எவருக்குமோ எந்த அதிகாரமும் இல்லை." - இவ்வாறு திட்டவட்டமாகத் ...

மேலும்..

முச்சக்கர வண்டி விபத்தில் காப்பாளர் மரணம் திருமலையில் சம்பவம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில்  முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை-வளர்மதி வீதியில்  வசித்து வரும்  இலங்கை போக்குவரத்துச் ...

மேலும்..

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்; ஊடகவியலாளர்கள் மீது கைவைக்காதீர்கள் அரசிடம் சஜித் வேண்டுகோள்…

"சில விடயங்கள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக ஊடகவியலாளர்களும், சமூக ஊடகப்  பயனாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடந்த சில நாட்களில் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இருக்குமாயின் ஊடகவியலாளர்கள் மீதும் கைவைக்க வேண்டாம் ...

மேலும்..

மாவீரர் நினைவேந்தல் தடை கோரி வடக்கில் 6 நீதிமன்றங்களில் இன்று ஒரே நாளில் மனுக்கள்…

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கோரி வடக்கு மாகாணத்தில் 6 நீதிமன்றங்களில் இன்று ஒரே நாளில் பொலிஸாரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வவுனியா, மன்னார், பருத்தித்துறை, மல்லாகம், யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிவான் நீதிமன்றங்களிலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கமைய ...

மேலும்..

கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர் தனது வீட்டுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ...

மேலும்..

நோர்வூட் பிரதேச சபை ‘பட்ஜட்’ மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு…

(க.கிஷாந்தன்) நோர்வூட்  பிரதேச சபையானது காங்கிரஸின் சபை என்றும், எதிரணி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கமுடியாது எனவும் குறித்த சபையின் உப தலைவர் வெளியிட்ட கருத்துக்கு  கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடும் வகையில் 'பட்ஜட்' மீளாய்வுக் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் இன்று (19) வெளிநடப்பு ...

மேலும்..

மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் நினைவேந்தல் தடை மனுக்கள் ஒத்திவைப்பு…

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொலிஸாரின் மனுக்களை மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்கள் ஒத்திவைத்துள்ளன. மல்லாகம் நீதிமன்றம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் ...

மேலும்..

வவுனியா, மன்னாரில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை உத்தரவு

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு மாவட்ட நீதிமன்றங்களிலும் பொலிஸார் இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை ...

மேலும்..

மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

சமுர்த்தியின் பிரதான நோக்கம் வறுமையை ஒழித்தல் ஆகும்-யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (19) காலை 9 மணிக்கு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் தலைமையில் -தீவகம் தெற்கு, தீவகம் வடக்கு மற்றும் நெடுந்தீவு பிரதேச ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில்  கொரோனா  தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று(18-புதன்கிழமை) மூன்று  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அடிப்படை சம்பளமாகவும் நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும்…

ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அடிப்படை சம்பளமாகவும் நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். தவிர மொத்த கூட்டுத்தொகை சம்பளமாக இருந்தால் ஏற்க மாட்டோமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இதாராகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ...

மேலும்..

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் அதிகூடிய 192 புள்ளிகளைப் பெற்று வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவி சஹா சாதனை.

வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி முகம்மது சமீம் ஆயிஷா சஹா 192 புள்ளிகளைப் பெற்று  ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த பாடசாலையில் இம்முறை ...

மேலும்..

மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம்;ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்எருவில்பற்றுப் பிரதேசசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விசேட அமர்வு இன்றைய தினம் (19) சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் கலந்துகொண்டிருந்த ...

மேலும்..

மட்டக்களப்பு-கருவேப்பங்கேணி ; மூன்று வீதிகளை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதியின் இணைப்பு வீதிகள் உள்ளிட்ட மூன்று வீதிகளை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபையின் 06ஆம் வட்டார ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றி

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 20201ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று வியாளக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் 9.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது ...

மேலும்..

பதினாறாயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் ‘சியபத நிவாச’ வீடமைப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

மரதகஹமுல 'சியபத நிவாச' வீடமைப்பு திட்டத்திற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (18) அடிக்கல் நாட்டப்பட்டது. சகல குடும்பத்தினருக்கும் தங்களுக்கானதொரு இல்லம் என்ற எண்ணக்கருவிற்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட ...

மேலும்..

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!

சில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர்வழக்கில் இருந்து இன்று (19) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த இருவருக்கும் கொழும்பு ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறக்கும் திகதி வெளியானது .

கொரோனா வைரஸ் காரணமாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்படட பகுதிகளைத் தவிர அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்ட பாடசாலைகள் நவம்பர் 23 திங்கள் முதல் மீண்டும் ...

மேலும்..

திருகோணமலையில் டெங்கு பரவும் அபாயம்;எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்.

கொவிட் 19 தொற்று காரணமாக மறக்கடிக்கப்பட்ட  டெங்கு மீண்டும் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். திருகோணமலை, சீனக்குடா, தம்பலகாமம்,மற்றும் கந்தளாய் பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக ...

மேலும்..

மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு கிடைத்து நாட்டு மக்களின் அதிஷ்டம் – ஊவா மாகாண ஆளுநர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வொன்று ...

மேலும்..

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.65 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலையின்படி, 5,65,34,629 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,93,13,919 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரசுக்கு உள்ளாகி இதுவரை 13 இலட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு ...

மேலும்..

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் .

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முதலாம் வருட பதவிப்பிராமான நிறைவு  மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் 75 வது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டும் கொரோனா வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட  செயலகத்தின்  ஏற்பாட்டில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் ...

மேலும்..

வவுனியா பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

 வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. நகர பள்ளி வாசலின் ஏற்பாட்டில் நசார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரார்த்தனையில் சித்திக் ளெலவி அவர்கள் துஆ பிரார்த்தனை செய்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ...

மேலும்..

கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற ஹனா இப்fபத்

இம்முறை இடம்பெற்ற 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவி ஜே.ஹனா இப்fபத், கல்முனை வலய மட்டத்தில் முதலாவது அதிகூடியதும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடியதுமான 190 புள்ளிகளை பெற்றுள்ளார்.இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த சுங்க உத்தியோகத்தர் ஆதம்பாவா ஜலீல் ...

மேலும்..

வவுனியா நகரசபையின் 2021 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப் மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டில் உள்ள வவுனியா நகரசபையின் 2021 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 25 நாட்களாக தொடரும் ஊரடங்கு – வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்கள்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் 24 ம் திகதி முதன்முதலாக பதினொறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 25 ம் திகதி காலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் 18 ம் திகதி புதன்கிழமை வரை 25 நாட்களாக தொடர்ந்து செல்கிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நாளந்த வேலை ...

மேலும்..