February 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்டது தாரா லிங்கம் என வரலாற்று ஆய்வாளர் உறுதி – ஸ்ரீதரன் எம்.பி

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் ...

மேலும்..

என்னால் 2,153 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் ; நபர் ஒருவர் செய்த வினோத காரியம்! என்ன தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னுடைய எலும்பு மஞ்ஞையின் சில பகுதிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக சில புதிய ஸ்டெம் செல்களை பொருத்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் இருப்பேன் என்றும் ...

மேலும்..

20க்கு ஆதரவளித்ததன் பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டது: நஸீர் அஹமட்

அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து,கருத்து தெரிவித்த ...

மேலும்..

மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் உள்ளது-ஆதங்கப்பட்ட உறுப்பினர்

மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் இருப்பதாகவும் கல்முனை வாழ்  இளைஞர்கள் அதனை பொருத்துவதற்கு முன்வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை(9) இரவு இடம்பெற்ற விசேட ...

மேலும்..

கல்லடி முகத்துவாரம் தோமஸ் அன்டணி குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தோமஸ் அண்டனி குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் ...

மேலும்..

பிரிட்டன் தூதுவருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹூல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று(10) கொழும்பில் நடைபெற்றது. நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் உட்படப் பல விடயங்கள் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன. இந்தக் கூட்டத் ...

மேலும்..

கொரோனா வைரஸ்-மேலும் 591 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 591 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,053 இலிருந்து 65,644 ஆக அதிகரித்துள்ளது.   கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்பு!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 18ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக ...

மேலும்..

முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம்-நாமல் ராஜபக்ச

முத்தையா முரளிதரனிடம் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கியுள்ளோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(10) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்சிவிப்பதற்கான மேற்பார்வை செய்வதும், அவர்களின் பொருளாதார ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படமாட்டார் – சபாநாயகர்

நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட மாட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் போதே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார். ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு நீதிமன்றத்தில் ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் – சாணக்கியன் காட்டம்!

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன்ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ...

மேலும்..

தமிழர்களின் பாரம்பரிய முறையில் திருக்கோவில் பிரதேசத்தில் நெல் அறுவடை!

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில்; நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட 175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா தமிழர்களின் பாரம்பரிய முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளும் நெற் செய்கையினை மக்கள் ...

மேலும்..

200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே இன்று (10) அதிகாலை கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான ...

மேலும்..

ஜனாஸா விடயத்தில் பிரதமரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது : ஹரீஸ் எம்.பி

ஜனாஸா நல்லடக்க விடயத்தில் முஸ்லிம்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானமாக நல்லடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படும் என இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். அப்போது சபை அமர்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற ...

மேலும்..

இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா

இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பண்டிகையையொட்டி இத்தாலியின் வெனீஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விதவிதமான முக கவசங்களை அணிந்து மக்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும்..

சுமந்திரனுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து சபையில் கருத்து மோதல்!

நீதிமன்ற உத்தரவை மீறியமை காரணமாகவே எம்.ஏ.சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (11) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவற்று ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என ...

மேலும்..

உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்றும் சீரகம்!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம்  பயன்படுத்தப்படுகிறது.  சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை ...

மேலும்..

திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறையை எதிர்த்து திருகோணமலை நகரின் மத்தியில் மீனவர்கள் இன்று(10) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள். டைனமைட், தடைசெய்யப்பட்ட வலை, தடை செய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் தொடர்ந்தும் இடம்பெறுவதை கண்டித்தும் உரிய அதிகாரிகள் இதன் நிமித்தம் தமது கடமைகளை ...

மேலும்..

வவுனியாவில் வீட்டிலிருந்து மாணவி சடலமாக மீட்பு!

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள வீட்டில் 16வயதுடைய சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்  நேற்று (09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா  கா.போ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி மதியம் பாடசாலை ...

மேலும்..

ஆசிரியரை தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க நகை கொள்ளை; தம்பிலுவில் பகுதியில் சம்பவம்

அம்பாறை திருக்கோவில்  பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில்  பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியர் சம்பவதினமான திங்கட்கிழமை ...

மேலும்..

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு கிடையாது-ஜி.எல்.பீரிஸ்

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் !

பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தீர்மானம் எட்டப்படும் என ஆணைக்குழுவின் ...

மேலும்..

‘இனப்படுகொலை’ யால் சபையில் நேற்று கடும் தர்க்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயன்படுத்திய ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் ‘அர்த்தம்’ கேட்டதுடன் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனவே அதனை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்திய போதிலும் ”இனப்படுகொலை” என்று தான் கூறிய வார்த்தையை மீளப்பெற முடியாது ...

மேலும்..

கொவிட் தொற்றினால் உயிரிழபோரை அடக்கம் செய்ய அனுமதி

கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் முன்வைத்த கருதத்தொன்றுக்கு பதிலளித்த போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை ...

மேலும்..

ஹோப்’ விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது..!

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் தயாரிக்கப்பட்ட 'ஹோப்' விண்கலம் நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட குறித்த விண்கலம் நேற்றிரவு செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை அடைந்ததாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஹோப்' விண்கலம் பூமியில் ...

மேலும்..

புன்னக்குடாவில் அமையவிருக்கும் ஆடைக் கைத்தொழில் பூங்காவின் மூலம் சுமார் 8000 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்- வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புன்னக்குடா பகுதியில் அமையவிருக்கும் ஆடைக் கைத்தொழில் பூங்காவின் மூலமாக எமது பிரதேசத்தைச் சார்ந்த சுமார் 8000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச் செய்கை மேம்பாட்டு ...

மேலும்..

மனைவியின் சித்தப்பாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரும் ரோஹித்த ராஜபக்ச

பாலியல்துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனது மனைவியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் மகன் ரோகித்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். கொழும்பின் ஐந்துநட்சத்திர விடுதியொன்றில் குறிப்பிட்ட நபர்கண்டித்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதை அறிந்து ...

மேலும்..

ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்: மட்டக்களப்பில் பாடசாலையொன்றில் தேடுதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாடசாலை வளாகத்தினுள் விசேட அதிரடிப்படையினரும் பொலஸாரும் இணைந்து இந்தத் தேடுதலை முன்னெடுத்தனர். வெல்லாவெளி கிராம ...

மேலும்..

மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை துரிதமாக ஏற்படுத்துங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (09) தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின்போது குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ...

மேலும்..

மேல் மாகாணத்தில் பாலர் பாடசாலைகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் கொரோனா அனர்த்தம் குறைவாக உள்ள பிரதேசங்களில் பாலர் பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி ...

மேலும்..

வவுனியா-சமளங்குளம் பாடசாலை மாணவர்கள் விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால்  (09) நேற்றைய தினம் விஷேட விழிப்புணர்வு நிகழ்வு  பாடசாலையை சுற்றியுள்ள பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது . கொரோனா மற்றும் டெங்கு இல் இருந்து எமது பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை சமூகத்தினரால் இச் செயற்பாடு  ...

மேலும்..

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தில் இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்! – வியாழேந்திரன் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த பின்புலத்தில் இருந்தாலும்  கைது செய்யப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்துவதாக இராஜாங்க அமைசர் எஸ்.வியாழேந்திரன் நேற்று(09) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..