March 14, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கான முன்னாயத்த கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பதில் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது மத்திய மற்றும் ...

மேலும்..

அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றார் முஜிபுர் ரஹ்மான்!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (செவ்வாய்க்கிழமை) திரும்பப் பெற்றார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ...

மேலும்..

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை

தற்போதைய தொழில்நுட்ப உலகில் டிஜிற்றல் மத்திய நிலையம் என்பது மாணவர்களுக்கு புதிய அறிவை தேடுவதற்குத் தேவையான ஒரு வளமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பீ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிற்றல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்துப் பேசும் போது அவர் ...

மேலும்..

இருட்டறையில் கட்டி வைத்து 10 மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

கண்டி – பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 10 மாணவர்கள் இருட்டறையில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேற்;படி சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி காப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை விடுதிக்குள் 10 மாணவர்களை ...

மேலும்..

30 நாட்களாக மகனை காணவில்லை! பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்

பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பெத்தேகம ...

மேலும்..

யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

கொழும்பில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை சுவரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். 27 வயது திருமணமான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த ...

மேலும்..

சிறப்புரிமை விவகாரத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பது சபாநாயகரை சார்ந்தது – அமைச்சரவை பேச்சாளர் பந்துல

உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைப்பது தொடர்பில் சபாநாயகர் மற்றும் சிறப்புரிமை குழு தீர்மானமே இறுதியானது. இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் எவையும் இல்லை. தேவையேற்படின் சம்பந்தப்பட்டவர்கள் சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கப்படக் கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ...

மேலும்..

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட வேண்டும் – சரித ஹேரத்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்கள். பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை, பொருளாதார தொடர்பில் அவர்களுக்கு எவ்வித அறிவும் கிடையாது. பொதுஜன பெரமுனவின் பலவீனத்தை ஜனாதிபதி தனக்கு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவை விசாரணை செய்ய ஆளும் தரப்பு சபாநாயகரிடம் கோரிக்கை – ஜி.எல்.பீரிஸ்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் முத்துறைகளுக்கும் இடையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

நாட்டின் கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் – மைத்திரிபால சிறிசேன

இலங்கை மாணவர்கள் மருத்துவம் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் கல்வியை பெற்றுக்கொள்ள அரச துறை மற்றும் தனியார் துறையில் பூரண சிறப்புரிமைகள் இருக்க வேண்டும். அரச துறைக்கு மாத்திரம் இந்த சிறப்புரிமைகள் இருக்கவேண்டும் எனத் தெரிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு என முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

நீதிமன்றத்தின் தடையுத்தரவை சவாலுக்குட்படுத்தும் நோக்கம் கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையை மீள் பரிசீலனை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவுறுத்தியுள்ளோம். நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது என நிதி இராஜாங்க ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் இவ்வாண்டிற்கான மேலதிக நேர கொடுப்பனவிற்கு மாத்திரம் 6 கோடி ரூபா

நாட்டில் தேர்தலொன்று நடத்தப்படாதபோதிலும், தேர்தல் ஆணைக்குழுவின் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவிற்காக மாத்திரம் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தொகையை தேர்தல் ஆணைக்குழு மத்திய வங்கியிடமிருந்து கேட்டுக்கொண்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆவணங்களில் ...

மேலும்..

உள்ளூர் விமான சேவை மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தில் திருத்தம்

உள்ளூர் விமான சேவையின் பாதுகாப்புக்கு ஏற்புடையதான சட்ட வரையறைகளைப் புதுப்பித்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்கான பொறுப்பு வரையறைகளை அடையாளங் காண்பதற்காக 2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் ...

மேலும்..

பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு நாட்டை அராஜகமாக்கினால் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிவரும் – வஜிர எச்சரிக்கை

பணி பகிஷ்கரிப்பு மேற்கொண்டு நாட்டை அராஜகமாக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நாடு அராஜகமானால் 25வருடங்களுக்கு மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போகும் . அதனால் நாடு அராஜகமாகுவதை தடுப்பதற்கு அரசாங்கம் பின்வாகப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற ...

மேலும்..

வர்த்தமானி அறிவித்தல்களால் தடுக்க முடியாது : திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் இடம்பெறும் – தொழிற்சங்கங்கள் உறுதி

திட்டமிட்ட படி நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சகல துறைகளும் முடங்கும் வகையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி சட்ட மூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி ...

மேலும்..

தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு – இடதுசாரி ஜனநாயக மக்கள் முன்னணி

அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்ளை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பொது காரணிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் போராட்டங்கள் மாத்திரமே மிகுதியாகும் என இடதுசாரி ஜனநாயக ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது – பந்துல குணவர்தன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாது. தற்போதுள்ள சூழலில் ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் தேவைகளுக்காகவே தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ...

மேலும்..

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் சேர்ப்பது குறித்த விசேட அறிவிப்பு

அரச பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை மார்ச் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 நிலையங்களில் இதற்கான பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான ...

மேலும்..

ரயில் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலாகும் வகையில் இரத்து!

இலங்கை ரயில்வேயின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அத்தியட்சகர் தெரிவித்தார். ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய வரிக் ...

மேலும்..

அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மானியங்கள் வழங்கப்படும் – அரசாங்கம்

வரி சீர்திருத்தங்களினால் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே ...

மேலும்..

போக்குவரத்துக்கு நாளை எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு!

போக்குவரத்துக்கு நாளைய தினம்(புதன்கிழமை) எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் போக்குவரத்துக்கு ...

மேலும்..

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்-ஆசிரியர்சங்கம் அழைப்பு!

நாளையதினம் இடம்பெறவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் பகிஸ்கரிப்பு!

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவளித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்

மேலும்..

கிழக்கில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

கிழக்கு கடற்பரப்புக்களில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மற்றும் உலகின் மிக மதிப்புமிக்க கடல் பகுதிகளில் 10 மில்லியன் சதுப்புநில தாவரங்களை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த திட்டத்தை ஐக்கிய அரபு இராச்சியம் ...

மேலும்..

தொழுநோயா என்பதை அறிய வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பலாம்

தொழுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் வாட்ஸ்அப் மூலம் தோலில் உள்ள தழும்புகளின் புகைப்படத்தை அனுப்பி உண்மையை உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இது தொடர்பான புகைப்படத்தை 0754434085 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறு ...

மேலும்..

மாலைதீவு குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் சுற்றுலா அமைச்சர் ஹரின்

சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார் . “அழகான மாலத்தீவுகள் தொடர்பாக பெர்லினில் நான் கூறிய கருத்து, சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவில் அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம் ...

மேலும்..

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் : வர்த்தமானி வெளியீடு

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (15) பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் , நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி ...

மேலும்..

தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

கடந்த 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறுகோரி, உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ...

மேலும்..

புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன்படி, அத்தியாவசிய பொது ...

மேலும்..

நள்ளிரவு முதல் புகையிரத வேலைநிறுத்தம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்..

சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த 24 ஆம் திகதி பொலிஸாரினால் ...

மேலும்..

மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு நியமனம்

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். சுகாதார இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பாகவுள்ள வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இரட்டிப்பாக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில் - தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ...

மேலும்..

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வின் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை ...

மேலும்..

சிலோன் மீடியா போரத்தின் தலைவருக்கு பாராட்டு !

மாளிகைக்காடு நிருபர் சாய்ந்தமருது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளரும், சிலோன் மீடியா போரத்தின் தலைவருமான கலாநிதி றியாத் ஏ மஜீத் சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்றமையை சிலோன் மீடியா போரம் பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு தலைவரின் ...

மேலும்..

இலங்கையில் களவாடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கையடக்க தொலைபேசிகள்

இலங்கையில் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் 8 ஆயிரத்து 422 கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன. இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. காணாமல் போகும் தொலைபேசிகளை கண்டறியும் நோக்கில் 2018 ஆம் ஆண்டு முதல் பொலிஸார் விசேட திட்டமொன்றை அறிமுகம் ...

மேலும்..

கிளிநொச்சியில் மாணவர்கள் – ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றல் உபகரணங்களை மாணவர்கள் வாங்குவதிலும், ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ...

மேலும்..

மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு நியமனம்

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். சுகாதார இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க எவ்வித சாத்தியங்களும் கிடையாது என இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கையும், ஆஸ்திரேலியாவும் இணைந்து செயற்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மைய நாள்களில் ...

மேலும்..

இலங்கை 2023ஆம் ஆண்டை நல்லிணக்க மீட்சிக்கான ஆண்டாக அடையாளப்படுத்துகிறது: அருணி விஜேவர்தன

இலங்கையில் 2023 ஆம் ஆண்டை நல்லிணக்கம், மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார். பொதுநலவாய தினத்தை முன்னிட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவால் சமாதானத்துக்கான பொதுநலவாய தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

வன்னியில் புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி: மக்கள் கடும் எதிர்ப்பு

வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்குக் கருங்கல் அகழ்விற்குப் பிரதேச செயலாளர் அனுமதி ...

மேலும்..

,யுத்தத்தினை விட வீதி விபத்துகள் பயங்கரமானவை -கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி

அபு அலா) தற்போதைய காலகட்டமானது, வீதி விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் கால கட்டம் என்பதினால், இளைஞர்கள் வீதி விபத்துக்கள் விடயத்தில் மிகவும் கரிசனையாக செயல்பட வேண்டுமென இலங்கை இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் ...

மேலும்..

அட்டைப்பள்ளம் பிரதேச கடலரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் அட்டைப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு சம்பந்தமாக அப்பிரதேசத்திலுள்ள தோட்ட உரிமையாளர்கள்இ ஹோட்டல் உரிமாயாளர்கள்இ மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்  என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் கல்முனை ...

மேலும்..

வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி 23 பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாகத் தப்பிச்சென்ற இலங்கை நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவர் ராமநாதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நூருள் ஹுதா உமர் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம்.அதாஉல்லா (பா.உ) தலைமையில் 2023.03.13ம் திகதி  நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர்  மண்டபத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கரைப்பற்று மாநகர சபை ...

மேலும்..

சுவிஸ் சைவ திருக்கோவில் ஒன்றியத்தின் இரண்டாவது பொதுக் கூட்டம்

நூருள் ஹுதா உமர் சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்  ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டின் பின்னதாக கலந்துரையாடல் மண்டபத்தில், பத்து திருக்கோவில்களின் உறுப்பினர்களுடன் சிறப்புற நடந்தது. இறைவணக்கம், அக வணக்கம் ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம்!

பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடாத்தப்பட்டது. கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (13) மாலை  கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில்   இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி ...

மேலும்..

தொழிற்சங்க போராட்டங்களில் பொது மக்களும் இணைய வேண்டும்

வரி அதிகரிப்பு, நீர், மின் கட்டண அதிகரிப்பு போன்ற அரச பயங்கர வாதத்த்திற்கு எதிராக முன்னெடுக்கப் படும் அனைத்து தொழிற் சங்கங்க நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை ...

மேலும்..

வைத்தியரான தனது மனைவியை கத்தியால் குத்திய ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்!

கொழும்பு சொய்ஸா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய கணவர் கம்பஹா ...

மேலும்..

சாய்ந்தமருது கடற்கரையில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மிதிவெடி இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப்பகுதில் இன்று (14) காலை இனங்காணப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது ...

மேலும்..

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகள் – கோப் குழு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகளை கோப் குழு முன்வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுத்தானத்தின் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருப்பது நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகக் கருதப்படும். ஆகவே காலதாமதமாகியுள்ள சகல அறிக்கைகளையும் ஒரு மாத காலத்துக்குள் ...

மேலும்..