March 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியோர் உடன் தனிமைப்படுத்தலில் ஈடுபடுக! – அரசு அவசர கோரிக்கை

இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து இம்மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிய கண்டி, அக்குரணையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ...

மேலும்..

மண்முனை மேற்குப் பிரதேச சபையினால் மக்களுக்கு மரக்கறி வகைகள் விநியோகம்

கொரோணா தொற்று தொடர்பில் நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்வியல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இந்நிலையினைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகரெத்தினம், பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை ஆகியோரின் வழிகாட்டலின் அடிப்படையில் மண்முனை ...

மேலும்..

பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கான  பொறிமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ...

மேலும்..

கொரானோவால் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக் கிரியை சுவிஸ் நாட்டில்! – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் கொரானோ வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த நபரின் இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ...

மேலும்..

அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – கோட்டாவிடம் மாவை கோரிக்கை

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ. சேனாதிராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் ...

மேலும்..

சமுர்த்திக் கடன்: அரசு திருகுதாளம் – அம்பலத்துக்கு வந்தது

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் தொகைக்குள்ளேயே அவர்களுக்கான உலர் உணவுப் பொதி ...

மேலும்..

உலர் உணவு விநியோகம்: பிரதேச செயலகங்களிடம்

சமுர்த்திப் பயனாளிகளுக்குரிய உலர் உணவுப் பொதிகளுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையால், அந்தப் பணிகளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களையும் முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவுறுத்தியுள்ளது. 76 ஆயிரம் சமுர்த்திப் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவர்களுக்கு 1, 500 ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபையால் எடுக்கபட்ட தீர்மானங்கள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று(28) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், ...

மேலும்..

உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை – ஜஸ்டின் ட்ரூடோ

கொரோன வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவையென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், இதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு அனைவரும் உறுதியுடன் இருக்கவேண்டும் ...

மேலும்..

சூர்யா மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால், இன்று விஜய்க்கு நிகராக இருந்திருப்பார், என்ன படம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சூரரை போற்று எப்படியாவது ஹிட் அடிக்க வேண்டும் ...

மேலும்..

பலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ்! வேற லெவல் – மிஸ் பண்ணிடாதீங்க

அஜித் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். சரிதானே. காரணம் அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்தியா அண்ணா பல்கலைக்கழக தக்‌ஷா குழுவினரின் ஆளில்லா விமானம் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த செயல் முறை விளக்கம் தான். அதே வேளையில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக ...

மேலும்..

இலங்கைக்கு விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்து சீனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக சீனா இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது. மேலும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள உதவியில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன. நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு ...

மேலும்..

கொரோனா அறிகுறியுடன் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

கொரோனா அறிகுறிகளுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்போவ பகுதியிலுள்ள இராணுவ முகாமில் உள்ள இருவரே இவ்வாறு குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்டுள்ள குறித்த இருவரும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள்

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். அந்தவகையில் பின்வரும் ...

மேலும்..

கொரோனா சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் இருவர் அனுமதி!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை- விசேட கலந்துரையாடலில் முடிவு!

மன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

பண்டாரகம பிரதேச செயலகப்பிரிவில் அட்டலுகம என்ற பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் கைது!

மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையான காலப் பகுதியிலேயே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஊரடங்கு வேளையில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மொத்தமாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 199 பேர் காண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை, தற்போது வரையில் 101 ...

மேலும்..

வலிகாமம் வடக்கு, தெற்கில் மனிதாபிமானப் பணிகள்!

வலி.வடக்கு, வலி.தெற்கு ஆகிய பிரதேசங்களில் சுயதொழில் மேற்கொண்டு தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலின்றிக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இன்று உலர் வழங்கலின் முதல்கட்டமாகக் குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ மா வழங்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபை ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாட்டுக்கான அவசர மீளாய்வு கூட்டத்தில் மக்களுக்கான அவசர வேண்டுகோள்.

சந்திரன் குமணன் அம்பாறை. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை  அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன்  இடம்பெற்றது. கல்முனை மாநகர சபையின்  கேட்போர் கூடத்தில் முற்பகல் சனிக்கிழைமை(28) இவ்விடயம் தொடர்பாக  விரிவாக கலந்துரையாடப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

மிருசுவில் படுகொலை சூத்திரதாரிக்கு எதிராக கே.வி. தவராசா முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருந்து இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.தவராசா தெரிவித்துள்ளார். 2000 ...

மேலும்..

பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் தெரிவிப்பு தத்தமது விபரங்களை கிராமசேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் ...

மேலும்..

வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள்  மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் வெளியில் செல்ல வேண்டாம் என  அம்பாறை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களை ...

மேலும்..

அம்பாறையில் ஊரடங்கு மீறல்கள் அதிகம்- 40க்கும் மேற்பட்டோர் கைது.

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள்  மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் வெளியில் செல்ல வேண்டாம் என  அம்பாறை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களை ...

மேலும்..

சம்மாந்துறை பொலீஸ் பிரிவில் ஊரடங்கை மீறிய 27 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று தற்போதுவரை 2 பேரும் எல்லாமாக 22 ஆம் திகதியிலிருந்து 27 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஒரு வான் உட்பட்ட 5மோட்டார் சைக்கிள்களும் இன்று ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

இலங்கையில் இதுவரை 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 50 பேர் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன., சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் இதுவரை ...

மேலும்..

அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோர் என 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்பட்ட சில சலுகைகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து அரச ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் எவரும் அடையாளம் காணப்படவில்லை- சுகாதார அமைச்சு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..