January 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வல்வெட்டித்துறை மீனவர் மீது இந்திய மீனவர்கள் அராஜகம்!

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது இந்திய மீனவர்கள் வாள் முனையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்கப் புறப்பட்ட அப்புலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 46) என்ற மீனவர் இலங்கைக் கரையில் இருந்து ...

மேலும்..

வருடத்தின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

புது வருடத்திற்கான பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (05) இடம்பெறவுள்ளது. சாப்பு மற்றும் அலுவலக பணியாளர்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட நான்கு திருத்தப் பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நாளை குற்றவியல் கோவை திருத்தப் பிரேரணை உள்ளிட்ட மூன்று பிரேரணைகள் மீதான ...

மேலும்..

சீரற்ற காலநிலையினால் 50,206 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 14,970 குடும்பங்களை சேர்ந்த 50,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, ...

மேலும்..

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் நிவாரண உதவி !

வேலணை சிற்பனை மற்றும் முடிப்பிள்ளையார் கோயிலடி பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் நிவாரண உதவி வழங்கப்பட்டது . முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் தீவக கிளையின் செயற்பாட்டாளர்களான மாணிக்கவாசகர் ...

மேலும்..

வேலணை பிரதேச சபைகுட்பட்ட பகுதிகளில் LED மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமாகிய கருணாகரன் நாவலன் அவர்களின் தீவிர முயற்சியால் புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் ( கேரதீவு ) , ஏழாம் வட்டாரம் ( ஊரதீவு ) ...

மேலும்..

இளைஞர்களின் அரசியல் வரவு அதிகரிக்க வேண்டும் பச்சிலைபள்ளி தவிசாளர் சுரேன்…

தமிழ்த் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு அதிகமாக இருக்க வேண்டும் என பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சி ஜெயந்திநகர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட  துடுப்பாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர்  ...

மேலும்..

சாய்ந்தமருதில் கொரோனா தொற்றாளர் 51 ஆக அதிகரிப்பு…

(அஸ்லம் எஸ்.மௌலானா) கடந்த இரண்டு நாட்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் இன்று (04) தெரிவித்தார். இவர்கள் ...

மேலும்..

கல்முனை, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி…

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில்  இன்று (4)  97 Rapid Antigen Test பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்குத் தேவையான பொருட்களை கல்முனையிலிருந்தே கொள்வனவு செய்வதால் கடை உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனைகளின் ...

மேலும்..

பருத்தித்துறையில் ஒருவருக்குக் கொரோனா! …

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கைக் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து ...

மேலும்..

வவுனியாவில் யானைகளின் அட்டகாசம்- நெற்பயிரை யானைகள் துவம்சம்

வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் ஒரே இரவில் 7ஏக்கர் நெற்பயிரை யானைகள் முற்றாக துவம்சம் செய்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள இலுப்பைக்குளத்திற்கு கீழ் 80 ஏக்கர் அளவில் நெற்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் இரவு குறித்த வயல்பகுதிகளிற்குள் உள்நுழைந்த ...

மேலும்..

வாழைச்சேனையில் கிளைமோர் ரக வெடிப்பொருள் மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர்  ரக வெடிப்பொருள்  ஒன்று இன்று(04) திங்கள் கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார்  தெரிவித்தனர்.   இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு இன்று கிடைத்த ...

மேலும்..

பாரதியார் பிறந்த தின கவிதை போட்டியிலே பங்கேற்ற ஊடகவியலாளர் தர்மேந்திராவுக்கு பாராட்டு சான்றிதழ்

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சேவையால் உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் பங்கேற்ற ஊடகவியலாளர் கவிஞர் தர்மகுலசிங்கம் தர்மேந்திராவுக்கு பாராட்டு சான்றிதழ் கிடைக்க பெற்று உள்ளது. சர்வதேச மட்டத்திலான போட்டியில் பங்கேற்று கவிதை திறமையை வெளிக்கொணர்ந்து இருப்பதை நயந்து இச்சான்றிதழை வழங்கி இருப்பதாக தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சேவை ...

மேலும்..

குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்.

சுகாதார அமைச்சில்  குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குடும்பநல சுகாதார சேவை அதிகாரி பதவிக்கான பாடத்திட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் ஏதேனும் ...

மேலும்..

நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு திறந்து வைப்பு

நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (.04) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்தை தொடர்ந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் மங்கள விளக்கேற்றி பொதுமக்கள் தொடர்பாடல் ...

மேலும்..

மேலும் 565 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (04) மேலும் 565 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 37,817 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும்..

குளிர் காலத்தில் சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க சில வழிகள் !!

குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம்  கருமையடைந்துவிடும்.  தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள்தூளை கலந்து தினமும் குளிப்பதற்கு கால் மணி நேரம் முன் உடலில் பயித்தம் மாவு ...

மேலும்..

சாதனைக்கு ரெடியாகும் மாஸ்டர்…

மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 13 ஆம் தேதி ...

மேலும்..

இலங்கைக்கு நாளை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை (05) நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். இலங்கைக்கு ...

மேலும்..

காதலில் விழுந்தேன்; கால் தடுக்கி விழுந்த காதலி! – ஆஸ்திரியாவில் ஆச்சர்ய சம்பவம்!

ஆஸ்திரியா நாட்டில் காதலன் ஒருவர் தனது காதலிக்கு மலை உச்சியில் வைத்து காதலை தெரிவித்து சில நிமிடங்களில் காதலி தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலியிடம் தனது காதலை தெரிவிக்க பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர். ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் சதித்திட்டம் போராட்டம் வெடிக்கும் என கணேசலிங்கம் எச்சரிக்கை விடுப்பு!

(க.கிஷாந்தன்)   பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 25 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்கமுடியாது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், 25 நாட்கள் வேலையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும் - என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேல் கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.   மஸ்கெலியாவில் இன்று ...

மேலும்..

நீர்கொழும்பு கடற்பரப்பில் சுமார் 60 கோடி ரூபா பெறுமதியான போதை பொருட்களுடன் நால்வர் கைது!

நீர்கொழும்பு கடற்பரப்பில் பாரிய அளவான போதைப்பொருட்களுடன் படகு ஒன்றில் பயணித்த நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த படகில் இருந்து 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் – சிவஞானம்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று (04) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

ராஜஸ்தானை மிரட்டும் பறவைக் காய்ச்சல் – கொத்து கொத்தாக இறக்கும் காக்கைகள்!

இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி, அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

  (க.கிஷாந்தன்) பொகவந்தலாவ சுகாதார பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் பீரட் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தோட்டத்தில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்தவரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பீரட் தோட்டத்தில் ஏற்கனவே நால்வருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ...

மேலும்..

அக்கரைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்சிறுவன் உயிரிழப்பு!

அம்பாறை- அக்கரைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு, சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று- அட்டாளைச்சேனை பகுதியில் குடும்ப தகராரு ...

மேலும்..

ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்; 13 பேர் காயம்

ஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹப்புத்தளை லிப்டன் சீட்டை பார்வையிடுவதற்காக ...

மேலும்..

பிரதமரின் தலைமையில் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35ஆவது தலைவர் நியமிப்பு

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கத்தின் 35ஆவது தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா அவர்களை அப்பதவிக்கு நியமிக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  (03) இடம்பெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டப வளாகத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பில் ஹெரோயினுடன் இருவர் கைது!

மட்டக்களப்பில் நீண்டகாலமாக  போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஏறாவூர், செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரை நேற்று (03) இரவு 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 கிராம் 200 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற ...

மேலும்..

பிள்ளைகள் இணைய வழி கல்வி நடவடிக்கை -முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை பற்றி கவனத்தில் கொள்வது அவசியம்

பிள்ளைகள் இணைய வழியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை பற்றி கவனத்தில் கொள்வது அவசியம் என கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணரான மானெல் பஸ்க்குவெல தெரிவித்துள்ளார். தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான வகுப்புகளைச் ...

மேலும்..

வாழைச்சேனையில் அவசர உயர்மட்ட கலந்துரையாடல்!

(ந.குகதர்சன்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவசர உயர்மட்ட கலந்துரையாடல் இன்று( 04)திங்கட்கிழமை வாழைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ...

மேலும்..

வவுனியாவில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பட்டானிச்சூர் கிராமம் முடக்கம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் கிராமம் சுகாதார பிரிவினால் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தின் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிப்பு

கொழும்பு – மாளிகாவத்தை NHS தொடர்மாடி குடியிருப்பின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தரம் 11 வகுப்புக்களை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து அரச பாடசாலைகளின் 11ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் தரம் 11ற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என ...

மேலும்..

யாழ்.பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை ...

மேலும்..

திருகோணமலையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு)

(பதுர்தீன் சியானா)  கொவிட்19 தொற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டல் திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை அனுராதபுர சந்தியில் விழிப்புணர்வூட்டல் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கும் நிகழ்வொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி திரு. ...

மேலும்..

5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ், நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5,000 வீடுகளில், 3,000 வீடுகளை அமைக்கும் பூர்வாங்கப்பணிகள் இன்று (04)ஒறுகொடவத்தையில் ஆரம்பமாகின்றன. நிரந்தர குடியிருப்பு வசதிகள் இல்லாத நடுத்தர வர்க்க குடும்பங்களின் தேவைகளை அறிந்து, வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

யாழ்- வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை!

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியுமென ...

மேலும்..

வவுனியா விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விநாயகபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராசேந்திரகுளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கொண்டா ...

மேலும்..