January 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்-நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறக்கப்படும் !

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் ...

மேலும்..

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிய மரம்!

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய உணவு பொருளாகவும் திகழ்கிறது.  புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. கர்ப்ப காலத்தில் ...

மேலும்..

ஜெய்சங்கருடன் சம்பந்தன் நாளை முக்கிய பேச்சு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாளை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் ...

மேலும்..

ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் அரசு! – மைத்திரி வலியுறுத்து

"கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை ...

மேலும்..

பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தனசிறி அமரதுங்க நியமனம்

பிரதமரின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க நியமிக்கப்பட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விஜேராமவிலுள்ள   உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து அவருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. ஏ.எம்.டீ.எச்.தனசிறி அமரதுங்க அவர்கள் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஜனாஸா நல்லடக்கத்திற்கான அனுமதி பெற அரச உயர்மட்டத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்-கல்முனை மாநகர முதல்வர்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாவால் மரணித்த ஒருவரது ஜனாஸாவை தகனம் செய்வதற்கு அவசர முயற்சி எடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க உயர்மட்டத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட ...

மேலும்..

அக்கரைப்பற்று பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.

(நூருள் ஹுதா உமர்) கொரோனா தொற்று நாட்டுக்குள் ஊடுருவியதன் பின்னர் அரசாங்க உத்தரவுகளையும், சுகாதார வழிமுறைகளையும் அதிகம் பின்பற்றியது பள்ளிவாயல்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் ...

மேலும்..

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்பவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் ...

மேலும்..

இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? – மனோ கேள்விக்கணை

"கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது?" - இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் கேள்வி எழுப்பினார் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 38 புதிய தொற்றாளர்கள்-மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

(பதுர்தீன் சியானா) கிழக்கு மாகாணத்தில் 38 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05)  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் 1323 ...

மேலும்..

ஜெனிவா விவகாரம் தொடர்பில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் கொழும்பில் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் ...

மேலும்..

இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு உயரிய பொறுப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் நாடாளுமன்றத்தில் மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை ...

மேலும்..

மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பினர்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்த மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,262 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும்..

‘பாஸ்’ விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை; கல்முனை மாநகர சபை அறிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு 'பாஸ்' (Pass) வழங்குவதில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது. இது விடயமாக கல்முனை மாநகர சபை விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ...

மேலும்..

மட்டக்களப்பு நீரோடையில் இறால் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு பெரிய உப்போடை நீரோடை (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று (05)செவ்வாய்க்கிழமை சடலம் அந்த பகுதியிலுள்ள நீரோடையில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில்  உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் தெரிவித்தனர். குமாரபுரம் ...

மேலும்..

ஈரோஸ் அமைப்பின் 46 ஆவது வருட நிறைவை ஒட்டி வடக்கு, கிழக்கு, மலையகம் முழுவதிலும் நிகழ்வுகள்

ஈரோஸ் அமைப்பின் 46 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலையகம் ஆகியவற்றில் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பால் கொரோனா தொற்று கால பொது சுகாதார நடைமுறைகளுடன் அனுட்டிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் சிறப்பம்சமாக வறிய, வருமானம் குறைந்த, வாழ்வாதாரம் ...

மேலும்..

விக்டோரியா நீர்த்தேக்க பகுதியில் 100 மீட்டர் சுற்றாடலில் சுண்ணாம்பு அகழ்விற்கு தடை…

கண்டி மாவட்டத்தின் விக்டோரியா நீர்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் பதிவான நில அதிர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (05) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கைக்கு அமைவாக பதிவான நில அதிர்வுகளினால் விக்டோரியா ...

மேலும்..

கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 3,772 பேர் ஆசிரியர் சேவையில்…

கல்வியல் கல்லூரியில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 3,772 பேரை ஆசிரியர் சேiயில் இணைத்துக்கொள்ளும் சேவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை ...

மேலும்..

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து வெளியேறினர்

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து இன்று வெளியேறினர். இன்று காலை 8.30 மணிவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்திலிலுந்து சிகிச்சை முடிவடைந்த நிலையில் ...

மேலும்..

இயக்கச்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்நோக்கி பயணித்த தனியார் பேரூந்து எதிரே பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது சாவகச்சேரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கென்ரர் வாகனம் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் ...

மேலும்..

சம்மாந்துறை நபரின் ஜனாஸா தகனத்திற்கெதிரான வழக்கு தள்ளுபடி

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நேற்று திங்கட்கிழமை (04) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த டிசம்பர் 18 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 25 ஆந் திகதி வரையும் 236 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய ...

மேலும்..

யாழில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்…

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனத்துக்கு முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

லிந்துலை சுகாதார பிரிவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(க.கிஷாந்தன்)   நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று (05) 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதன்படி லிந்துலை ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் ...

மேலும்..

திருக்கோவில் பிரதேசத்தில் அரசியல் கைதிகள் விடுதலையை கோரி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி பொலிஸாரினால் தடுத்து நிறுத்தம்!.

(சந்திரன் குமணன்) அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில்  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட  பேரணியை கொவிட் 19 தொற்றை காரணமாக கொண்டு பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்த பொலிசார் தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் ஊடக சந்திப்பில் கருத்து கூறிய ...

மேலும்..

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்…

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செய்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக விசேட காணி மத்தியஸ்சபை செயற்பட்டு வந்தது. நாட்டில் ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோட்டாஅரசிற்கும், மனித உரிமை ஆணையகத்திடமும் பகிரங்க கோரிக்கை மனு அனுப்பிவைப்பு…

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்களின் சார்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ...

மேலும்..

குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய வகுப்பறை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை …

எப்.முபாரக்  2021-01-05 குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய வகுப்பறை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள ...

மேலும்..

விமான நிலையங்களை ஜனவரி 23 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை !

எதிர்வரும் 23ம் திகதியாகும் போது, சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது அனுமதியளிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும்..

இவ்வளவு பெரிய வாழ்த்து அட்டையா? துபாயில் கின்னஸ் செய்து மாஸ் காட்டும் தமிழர்!

ராம்குமார் சாரங்கபாணி. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மிகப்பெரிய வாழ்த்து அட்டைகளை தயாரிப்பது, அதேபோல, மிகச்சிறிய சீட்டுக்கட்டை உருவாக்குவது என வித்தியாசமான நடவடிக்கைகளால், பல சாதனைகளை செய்து கின்னைஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளார். அண்மையில் ...

மேலும்..

ஹப்புத்தளை நகருக்கான புதிய மேயர் கௌரவ பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு !

ஹப்புத்தளை நகரின் புதிய மேயர் உபுல் திசாநாயக்க அவர்கள்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் விஜேராமவிலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று (05) பதவியேற்றார். முன்னாள் மேயர் சம்பத் லமாஹேவா அவர்களின் பதவி விலகலை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது கொவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை ...

மேலும்..

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் பதவியுயர்வு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப். எம் பிராந்திய வானொலியின் பிரதிப் பணிப்பாளராக பஷீர் அப்துல் கையூம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக இந்த வானொலியின் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டு இதன் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வந்தார். இந்த நிலையிலேயே பிரதிப் பணிப்பாளராக இவர் பதவியுயர்த்தப்பட்டுள்ளமை ...

மேலும்..

மாறுவேடத்தில் சென்று கிளி கும்பலை பிடித்த அதிகாரிகள் சென்னையில் சம்பவம் !

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வகை கிளிகளை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த கும்பலை வனத்துறை அதிகாரிகள் கையும், கிளியுமாக பிடித்துள்ளனர். இந்திய வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட கிளி வகைகளாக வகைப்படுத்தப்பட்ட கிளிகளை வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு கும்பல் இந்த வகை ...

மேலும்..

ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும்-தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களின் இரு நூல்கள் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைப்பு

  (பாறுக் ஷிஹான்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட  பட்டதாரி பயிலுநர்களிற்கு பயிற்சி காலத்தில் வழங்கப்பட்ட பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட "தாபன விதிக்கோவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள்" " உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத மனிதர்கள்" ஆகிய  இரு ...

மேலும்..

மட்டு மாவட்டத்தில் 52 ஆயிரம் வீடுகளும், 17 ஆயிரம் மலசல கூட வசதிகளும் தேவையாகவுள்ளது-இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கள் இருக்கின்றது. அதிலே கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே 239,000 இற்கு மேற்பட்ட வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கு 38,000 வாக்குகள்தான் வழங்கப்பட்டது. இது 5 இல் ஒருபங்குகூட இல்லை. ஆனால் ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் ...

மேலும்..

கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்து வீடு சேதம்!

(க.கிஷாந்தன்) மலையக பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் பெய்கின்ற மழையினால் கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. வீட்டின் இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் ...

மேலும்..

அதுரலியே ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலிய ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ...

மேலும்..

மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தில்லையம்பலம் ஹரீஸ்ரன்  சத்தியப் பிரமாணம்!

(ஹஸ்பர் ஏ ஹலீம்) மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தில்லையம்பலம் ஹரீஸ்ரன்  சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் அவர்களின் முன்னிலையில் நேற்று (04) பிரதேச சபையில் வைத்து உறுப்பினராக சத்தியப்பிரமாணம் ...

மேலும்..

தோல்விக்கு சுமந்திரனே காரணம் மாவை சேனாதிராஜா பகிரங்க குற்றச்சாட்டு !

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் தோல்வி மற்றும் அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென கட்சிக்குள்ளும் வெளியிலும் விமர்ச்சிக்கின்றனர். அதனை நான் பொது வெளியில் கதைக்கவில்லை கட்சிக்குள்ளேயே கதைத்துள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார். பல்வேறு ...

மேலும்..