March 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அர்த்தமற்றதாகும் ஊரடங்கு – முதல்வர் ஆனோல்ட்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகிவிடுகின்றது என யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இன்று (25) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டிருந்ததாவது. ஊரடங்கு சட்டம் ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்?

நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பேசப்பட்டதாக ...

மேலும்..

வதந்தியை பரப்பிய தனியார் பல்கலைக்கழக அதிகாரிக்கு விளக்கமறியல்!

கொரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, உண்மைக்குப்புறம்பான தகவல்களை முகப்புத்தகத்தில் வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலையின் அதிகாரியொருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் ...

மேலும்..

கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி

பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை ...

மேலும்..

சுமந்திரனின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களின் நிதியில் தினக்கூலி செய்யும் குடும்பங்களிற்கு இரவு உணவிற்கான ஒரு தொகுதி பாணும்,ஒரு தொகுதி உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது தற்போது நாட்டில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளாந்த கூலிவேலைகளுக்கு ...

மேலும்..

தீவகத்துக்கு சரவணபவனால் உலர் உணவுகள்!

தீவகம் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊடரங்கு நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றினை வழங்கவேண்டுமென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன் & சுடர் ஒளி பத்திரிகைகளின் நிறுவுனருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களிடம் தமிழரசுக் கட்சி ...

மேலும்..

வலி.வடக்கு மக்களுக்கு விது நம்பிக்கை நிதியம் உதவி!

கோவிற் 19 (கொரோனா) தாக்கதினால் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார நிலை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்ய இடர்படும் மக்களிற்கான உலர் உணவுப் ...

மேலும்..

சிறிதரனின் ஆலோசனையில் கிளி.மாவட்ட மக்களுக்கு உலர் உணவுகள்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  ஆலோசனைக்கமைய இன்றைய தினம் பளை, கரைச்சி, பூநகரி பிரதேசங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. முழங்காலில், அன்புபுரம், இரணைமாதாநகர், நாச்சிக்குடா மத்தி, நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னி, நாகபடுவான், ஜெயபுரம், வலைப்பாடு, ...

மேலும்..

COVID-19 பற்றி விவாதிக்க அமைச்சரவை கூடியது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சநிலை காணப்படும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10:30 க்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கூட்டத்தின் பின்னர் கருத்து ...

மேலும்..

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை- அறிக்கை வெளியானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மாலை 4 வரையான காலப்பகுதியில் எவரும் அடையாளம் காணப்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் நேற்றுவரையான உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி கொரோனா ...

மேலும்..

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அறிவிப்பு!

இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி தெல்பிட்டிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் மாத்திரம் தகவல் வௌியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக இதுவரை ...

மேலும்..

காரைதீவு வைத்தியசாலை பகுதியில் கொரோனா தொற்று நீக்கி மருந்து தெளிப்பு நடவடிக்கை இன்று….

கொரோனா வைரஸ் தொற்றுதலை தடுக்கும் முகமாக இன்றைய தினம் (25) புதன்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய பிரிவினரால் கொரோனா தொற்றுதலை தடுக்கும் இரசாயன மருந்தானது காரைதீவு வைத்தியசாலை பகுதிகளில் தெளிக்கப்பட்டது. கிருமி தொற்றை தடுக்கும் நோக்குடன் விசேட பாதுகாப்புடன் வைத்தியசாலை பகுதிகளில் இந்த ...

மேலும்..

மன்னாரில் விசேட அதிரடிப்படையினர், சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை!

மன்னார் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்தனர். விசேட அதிரடிப்படையினருடன் மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பணியை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர். விசேட அதிரடிப்படையின் வடமாகாண பொறுப்பதிகாரி லயனல் குணதிலக்கவின் பணிப்புரைக்கு ...

மேலும்..

காரைதீவு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இலவசமாக மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிவைப்பு…

காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பொது மக்களுக்காக இலவசமாக முகக்கவசங்கள் நேற்றய தினம் (24) வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, காரைதீவு 6ம் பிரிவு கிராம நிலத்தாரி, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி மேலும் இராணுவத்தினரும் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக விசேட திட்டம் வேண்டும் – சஜித்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் பணிபுரியும் ...

மேலும்..

கொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு: யாழ்.சுகாதாரத் துறையுடன் களத்தில்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் ...

மேலும்..

கிளிநொச்சி நகர் பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கிளிநொச்சி நகரில் கரைச்சி பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன. கிளிநொச்சி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவைச் சந்தை, பேருந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள், வங்கிகள் உள்ளிட்ட ...

மேலும்..

அக்கறை கொள்ளாத நிறுவனங்கள்: சுகாதார ஏற்பாடுகளின்றி தொழிலில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்!

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் சில தோட்டங்களில் எவ்வித சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுடன், கைகளைக் கழுவுதல் உட்பட தற்பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் தொழிலில் ஈடுபட்டதை ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்: அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி- ஜீவன்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

பெந்தோட்டை, பலப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் 336 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்!

பெந்தோட்டை, பலப்பிட்டிய ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 336 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்துருவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் நிஹால் ரணசூரிய தெரிவித்துள்ளார். இதில் 184 பேர் பலப்பிட்டிய பிரதேசத்திலும், 152 பேர் பெந்தோட்டையில் வசிப்பவர்கள் என அவர் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டிமற்றும் சீனப்பெண் முற்றாக குணமைடைந்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் 255 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இன்றைய தினம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி ஊடாக தங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான ...

மேலும்..

சிறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை!

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும், பிணை பெறமுடியாதவர்களையும் விடுவிப்பதற்கான வழியைக் கண்டறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய குற்றங்களைச் செய்த கைதிகளுக்கு சட்டரீதியான நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிந்துரைகளை ...

மேலும்..

இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்!

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான தனது விமான சேவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு, இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 பாதிப்பை குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ...

மேலும்..

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினருடன் களமிறங்கிய சுகாதாரப் பிரிவு!

வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தொற்று நீக்கும் செயற்பாட்டை மடுக்கந்த விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா, நகர சபையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகாதாரப் பிரிவினரும் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த வேலைத் திட்டத்தினை ...

மேலும்..

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய ...

மேலும்..

யாழில் வங்கியில் பணம் எடுக்கச் சென்றவேளை தரமறுத்த சம்பவம்: பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு!

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட தாயார் ...

மேலும்..

யாழ் பண்ணைப்பூங்கா பகுதியில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற்திட்டம்….

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் செயற்றிட்டங்களில் ஓர் அம்சமாக யாழ் நகர் மற்றும் யாழ் பண்ணைப்பூங்கா பகுதிகளில் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் விசேட செயற்திட்டம்  இன்று (25) விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 2,682 பேர் கைது

இம்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 2,682 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சுமார் 108 மணி நேர காலப்பகுதியில் 706 வாகனங்களும் பறிமுதல் ...

மேலும்..

அர்த்தமற்றதாகும் ஊரடங்கு! – வைத்தியர் ப.சத்தியலிங்கம்

ஊரடங்கு ஒரே நேரத்தில் தளத்தப்படுவதால் மக்கள் அளவுக்கதிகமாக ஒன்றுகூடுகின்றமையால் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு ஏற்படுகின்ற அபாயம் உள்ளமையோடு, நோய் பரம்பலுக்கான ஏதுநிலை மேலும் அதிகரிக்கக் காரணமாகவும் இந்த நிலைமை அமைகின்ற அபாயமுள்ளது. ஆகவே நாம், அவசரமாகத் திட்டமிட்டு சில முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ...

மேலும்..

இளமைக்குத் தேவை யோகா ! அடித்து கூறுகிறார் சன்னி லியோன் !

சருமம் பளபளப்புடனும் இளமையாகவும் இருக்க காரணம் தினமும் ஒரு மணிநேரம் மேற்கொள்ளும் யோகாதான் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் எங்கு சென்றாலும் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்து செல்கிறார். அடிக்கடி ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(செவ்வாய்கிழமை) சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிகப்பட்டு ...

மேலும்..

அஜித், விஜய் இப்போது கூட வாய் திறக்க மாட்டார்களா? ரசிகர்கள் கோபம்

அஜித் விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் வரும் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இவர்களின் ரசிகர்கள். ஆம்,இவர்களுடைய ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்துக்கொள்வார்கள். அப்படியிருக்க இவர்கள் படத்திற்கு வசூல் ...

மேலும்..

நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் என அறிவிப்பு!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் ...

மேலும்..

கொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் ...

மேலும்..

மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.   இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே ...

மேலும்..

இத்தாலியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரே மேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் ...

மேலும்..